செல்ஃபோனை அவாய்ட் பண்ணுங்க ! குடும்பத்தினருடன் பேசி ஹேப்பியா இருங்க ! போப் ஆண்டவரின் அதிரடி அட்வைஸ் !!

செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள்  அப்போதுதான் மனசில  அன்பும், மகிழ்ச்சியும் இருக்கும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

avoid cellphone and talk with  family members

உலகம் முழுவதும் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்டு வந்த செல்போன் தற்போது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு  செல்போன் அவர்களின்  அன்றாட தேவையாகிவிட்டது.

தூங்கும் நேரத்தை தவிர கிட்டத்தட்ட நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். சிலர் தூக்கத்தைக் கெடுத்து செல்போனுடன் குடியிருந்து வருகின்றனர்.  அப்படி செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ்  புத்தாண்டு அறிவுரை வழங்கி உள்ளார். 

Latest Videos

அதில் உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். . ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி “அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்” அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

“நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்” என்று அதிரடியாக அட்வைஸ் வழங்கியுள்ளார்..

click me!