
உத்தரகாண்ட் மாநிலத்தில் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் நியமனம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக ராஜேந்திர சிங் என்பவர், உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாசு கட்டுப்பாடு வாரியத்தில், தண்ணீர் சம்பந்தப்பட்ட துறை மற்றும் தேசிய அளவிலான வழக்கு என்பதால் இதனை, பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தலைவர் செயலாளர் உறுப்பினர் ஆகியோரின் நியமனம் குறித்து வழி வகுக்க 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராஜேந்திர சிங் ரத்தோர் விசாரணை நடத்தினார். அப்போது, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் தலைவர் தேர்வு செய்யப்பட்டத்தில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக உள்ள அதுல்யா மிஸ்ரா தடை விதித்து தீர்ப்பளித்தார்.
அதேபோல் கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 10 மாநிலத்தில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஜூலை 4ம் தேதி வரை நீடிக்கும் என அறிவுறுத்தியுள்ளது.