அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்; ஊழியர்களுக்கு அமேசான், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!!

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்கள் கவலையில் உள்ளனர். விசா சிக்கல்கள் காரணமாக பயணங்களைத் தவிர்க்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Apple, Amazon, Google, Microsoft warns their H-1B visa employees

US H-1B visa employees Worries: குடியேற்றம் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாட்டிற்கு மத்தியில், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பத் தொழிலாளர்கள் மத்தியில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. 

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் விசாக்களில் உள்ள தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. H-1B மற்றும் கிரீன் கார்டு உள்ளிட்ட உயர் திறன் கொண்ட விசாக்களுக்கான நிராகரிப்பு விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று சட்ட நிறுவனங்களும் எச்சரித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest Videos

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட நிறுவனமான கோஷ்ல் லாவின் முதன்மை வழக்கறிஞர் மால்கம் கோஷ்ல், "நாங்கள் தற்போது பார்ப்பது நிறைய கவலை மற்றும் பீதியை மட்டுமே. நிர்வாகம் மேலும் மேலும் வேகமடைவது போல் தெரிகிறது. மேலும் என்ன நடக்க இருக்கிறது எங்களால் ஊகிக்க முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு ஆபத்தா? வேலை விசா ரத்து செய்ய திட்டம்!

அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சத்தில் இந்தியாவுக்கான தங்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்ததாகக் கூறிய இரண்டு தொழில்நுட்ப ஊழியர்களை வாஷிங்டன் போஸ்ட் பேட்டி கண்டது. "அமெரிக்க குடிமகனாக இல்லாத அனைவரும் இங்கு சட்டவிரோதமாக இருக்கலாம் என்ற அனுமானம் உள்ளது," என்று தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். "நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் ஆவணங்களை எடுத்துச் செல்கிறோம்," என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய H1B விசா டிரம்பின் ஆதரவாளர்களுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒருபுறம் புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கொண்ட தொழில்நுட்பத் தலைவர்கள், மறுபுறம் அமெரிக்காவிற்கு குடியேற்றத்தைக் குறைக்க விரும்புவோர் உள்ளனர். டிசம்பரில் டிரம்ப் திறமையான குடியேற்றத்தை ஆதரிக்க வேண்டுமா அல்லது கட்டுப்படுத்த வேண்டுமா என்பது குறித்து X தளத்தில் வாதிடப்பட்டது.

பி-1/பி-2 விசாவை திருமண கிரீன் கார்டாக மாற்றுவது எப்படி?

எலான் மஸ்க் எக்ஸ் பதிவு:

கடந்த ஆண்டு டிசம்பரில், எலான் மஸ்க் X-ல் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டார், அதில் "முன்பு இருந்ததை எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக நமக்குத் தேவை. அமெரிக்காவில் மிகவும் திறமையான பொறியாளர்கள் மற்றும் மிகவும் திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதை ஒரு தொழில்முறை விளையாட்டு அணியாக நினைத்துப் பாருங்கள்: உங்கள் அணி சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டுமென்றால், அவர்கள் எங்கிருந்தாலும் சிறந்த திறமையாளர்களை நீங்கள் நியமிக்க வேண்டும். அது முழு அணியையும் வெல்ல அனுமதிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான அதிகபட்ச H-1B விசா அனுமதி பெற்ற அமேசான்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் H-1B விசா அனுமதிகளின் பட்டியலில் அமேசான் முதலிடத்தில் இருந்தது. 9,265 ஒப்புதல்களைப் பெற்றது. இது மற்ற நிருவனங்களைக் காட்டிலும் அதிகமாகும். அதைத் தொடர்ந்து காக்னிசண்ட் 6,321 அனுமதியுடனும், கூகுள் 5,364 அனுமதிகளையும் பெற்றுள்ளன. எலான் மஸ்க்கின் டெஸ்லாவும், மெட்டா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் மற்றும் பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் H-1B விசா அனுமதியை பெற்றுள்ளன. 

vuukle one pixel image
click me!