கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த மூத்த விஞ்ஞானி ஆண்டிரு பொட்டிக்வ் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்புட்னிக் வி வகை கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ஆண்டிரு பொட்டிக்வ் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் சுமார் 70 லட்சம் உயிர்களை பலி வாங்கியது. விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் கொரோனா தொற்றுக்கு வெவ்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலகம் முழுவதும் கோவிட் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
அந்த வகையில் ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக் வி. இந்தத் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பலனைத் தந்தது. 2020ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த இந்தத் தடுப்பூசியை 18 விஞ்ஞானிகள் கொண்ட குழு கண்டுபிடித்தது.
இந்தக் குழுவில் முக்கிய விஞ்ஞானியாக இருந்தவர் ஆண்டிரு பொட்டிக்வ். 47 வயதான இவர் அவரது வீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது. பெல்ட்டை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவு அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகப்பட்டனர்.
இதன்பேரில் விசாரணை நடத்தியபோது, 29 வயது இளைஞர் ஒருவர்தான் ஆண்ட்ருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று தெரிந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ரஷ்ய காவல்துறையினர் கூறியுள்ளனர். அவர்மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Bihar Snake Kiss Video: மதுபோதையில் விஷப் பாம்பை கையில் பிடித்து முத்தமிட்ட இளைஞர் பலி