தங்க ஆபரணங்கள் அணிவதில் அதிகம் விரும்புவது பெண்கள் என்றாலும் ஆண்களும் அணிந்து வருகின்றனர். பெண்களே அளவுக்கு அதிகமான தங்க நகைகள் வைத்திருப்பதை பார்த்திருப்போம்.
தங்க ஆபரணங்கள் அணிவதில் அதிகம் விரும்புவது பெண்கள் என்றாலும் ஆண்களும் அணிந்து வருகின்றனர். பெண்களே அளவுக்கு அதிகமான தங்க நகைகள் வைத்திருப்பதை பார்த்திருப்போம். தங்கம் வாங்குவதற்கு முக்கிய நாட்களாக கருதப்படும் அட்சய திருதியை உள்ளிட்ட நாட்களில் நகை கடைகளில் அதிகளவில் கூட்டம் கூடும். அந்த நாளின்போது இந்தியா முழுவதும் பெரிய அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகவும் அடுத்தநாள் புள்ளி விவரங்கள் வெளியாகும்.
தங்கத்தின் மீதான விலை, நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், இதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கம் வாங்குவதில் தீவிரமாகவே இருந்து வருகின்றனர். தங்க ஆபரணங்கள் வைத்துள்ளபோது, இதனை எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்றே அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாகவே, மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மிக அதிகமாக இருந்தாலும், பண்டிகை, விழா போன்ற நாட்களில் மட்டுமே தங்கம் அணிந்து வருவது வழக்கம் என்றாலும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தங்கம் அணிவதைப் பார்த்தால் நாம் வாய் பிளக்கத்தான் செய்வோம். ஆமாம்... 4 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு உலா வருகிறார். அமஜத் சயீத் என்பவர்தான் அந்த நபர். இவ்வளவு தங்க ஆபணங்களை அணிந்து வருவதால், அவரை தங்க மனிதன் என்றே அழைக்கின்றனர்.