வைரஸ் வேண்டுமா..,சாக வேண்டுமா எனக்கு கால் பண்ணுங்க..!! இளம்பெண்ணின் பலான வீடியோவால் அமெரிக்காவில் பரபரப்பு..!

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2020, 12:17 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று  பரிசோதனை முடிவுக்காக அவர்  மருத்துவமனை ஒன்றின் வாசலில்  காத்திருக்கிறார், அதை அவர் வீடியோவில் குறிப்பிடுகிறார்,    பிறகு அங்கிருந்து தான்  வால்மார்ட் என்று சொல்லக்கூடிய ஷாப்பிற்கு செல்வதாக கூறுகிறார்,

தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும் அதை தான் பலருக்கு பரப்ப போவதாகவும் கூறி பொது இடத்தில் நின்று  வீடியோ எடுத்து வெளியிட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் . இந்த பெண்ணின் வீடியோ அமெரிக்காவின் டெக்ஸாசில்  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ,  கொரோனா வைரஸை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது .  நிமிடத்துக்கு நிமிடம் அந்த வைரஸ் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது .  வைரஸில் இருந்து தப்பிக்க வழிதேடி உலகில் உள்ள அத்தனை ஆராய்ச்சியாளர்களும்  செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர் .  கோடிக்கணக்கான மக்கள் உயிர் பயத்தில் நடுநடுங்குகின்றனர். 

ஆனால் இந்நேரத்திலும் சிலர் கொரோனா வைராசை வைத்து   மீம்ஸ் போடுவது , அதைவைத்து  டிக்டாக் வெளியிடுவது ,  வீடியோ போடுவது என நிலவரம் புரியாமல் கலவரம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் டெக்சாஸை  சேர்ந்த லோரெய்ன் மராடியாகா என்ற 18 வயது பெண் ,  மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான வீடியோ ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,  மராடியாகாவின் வீடியோ அமெரிக்காவில் பொது சுகாதாரத்துறையை அச்சுறுத்தும் வகையில்  அமைந்துள்ளதாக அமெரிக்க போலீசார் குற்றம்சாட்டுகின்றனர் .  அவர்  தற்போது எங்கிருக்கிறார் அவர் இதுவரை இதுபோன்று என்னென்ன வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.  அதாவது மராடியாகா  வெளியிட்டுள்ள வீடியோவில், 

கொரோனா வைரஸ் தொற்று  பரிசோதனை முடிவுக்காக அவர்  மருத்துவமனை ஒன்றின் வாசலில்  காத்திருக்கிறார், அதை அவர் வீடியோவில் குறிப்பிடுகிறார்,    பிறகு அங்கிருந்து தான்  வால்மார்ட் என்று சொல்லக்கூடிய ஷாப்பிற்கு செல்வதாக கூறுகிறார், மருத்துவரின் முடிவில்  தனக்கு  வைரஸ் அறிகுறி  இருப்பதாக தெரியவந்துள்ளது.   இப்பொழுது நான் இங்கே இருந்து கீழே போகிறேன் என்றால் நீங்கள்  அனைவரும் கீழே... போகிறீர்கள் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளார்... நீங்கள்  வைரஸ் பெற விரும்பினால் அல்லது இறக்க வேண்டும் என  விரும்பினால் தயவு செய்து எனக்கு கால் செய்யுங்கள் என விளையாட்டாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.  நான் நினைத்தால் பலருக்கு வைரஸ் பரப்ப முடியும் என்றும் அவர் இறுதியாக எச்சரிக்கிறார்,  அவரின் இந்த வீடியோ பலரையும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.  இது ஆபத்தான சமூக வீடியோ என்றும் இது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ள போலீசார்  அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

click me!