ஓவர் சுய இன்பம்... எக்ஸ் காதலர்களை தேடும் அமெரிக்கர்கள்..!! ஆய்வு முடிவில் வெளிவந்த அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published May 4, 2020, 11:02 AM IST
Highlights

இதில் சுமார் 48 சதவீதம் பேர் முன்னாள் காதலர்களுடன் பழகுவதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் அதில் ரகசியம் காக்க இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

கொரோனா வைரசால் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் டேட்டிங் ஆப்களை அதிக அளவில் பதிவிறக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் பழைய காதலர்களுடன் ச்சாட்டிங் செய்து தனிமை கழித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரையில்   35 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரையில் 2 லட்சத்து  நாற்பதாயிரம்  பேர் உயிரிழந்துள்ளனர்  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸ் அமெரிக்காவையே மிகக் கடுமையாக தாக்கி வருகிறது,  அங்கு மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  67 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குவாரண்டைன் அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அப்படி உள்ளவர்களில் 40% பேர் தங்கள் தனிமையை போக்கி கொள்ளவும் அதே நேரத்தில் தங்களுக்கு அதிகம் பிடித்தவர்களுடனும் தங்கள் உறவை புதுப்பிக்க தொடங்கியுள்ளனர் அதற்காக இதுவரை 40% பேர் டேட்டிங் ஆப்புகளை புதிதாக  பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் எனவும் தெரியவந்துள்ளது,  பொதுவாக திருமணமானவர்கள்  கூட தங்களது பழைய காதலர்களுடன் தங்கள் மனதிற்கு பிடித்தபடி உறவாடி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .  அதில் இன்னும் பலர் தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக எல் இ எல் ஓ என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று சுமார் ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. தனிமையில் உள்ளவர்களில்  61 சதவீதம் பேர்  ஃபேஸ்புக் வாயிலாகவும் , 48% பேர் வாட்ஸ்அப் மூலமாகவும் , சுமார் 48 சதவீதம் பேர் ட்விட்டர் மற்றும்   வீடியோ  கால்கள் மூலமாக தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுமார் 48 சதவீதம் பேர் முன்னாள் காதலர்களுடன் பழகுவதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் அதில் ரகசியம் காக்க இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பெரும்பாலானவர்கள் தனியாக உள்ள ஒரு  ஆணையோ பெண்ணையோ விரும்புவதைவிட எக்ஸ்  காதலர்களை அதிகம் தேடுவதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு பேர்  முன்னாள் காதலர்களால் தாங்கள் ஆறுதல் அடைந்துள்ளதாக ஆய்வு நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.   தனிமையில் இருக்கும்போது உடல் தேவைகள் அதாவது அதிகம் பாலியல் உணர்வு பெற்றிருப்பதாக 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் . இதில் பத்தில் ஆறு பேர் பொழுதுபோக்கிற்காக பொதுவாக பேசுவதாக கூறியுள்ளனர் .  அதேபோல்  தனிமைப்படுத்துதல் காரணமாக சுய இன்பத்திற்கு பயன்படுத்தப்படும் toy'  ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை 185 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது .  அதேபோல்  தங்களுக்கு பிடித்தவர்களுடன் வீடியோ கால் பேசுவதற்கு முன்னர் நான்கில் மூன்று பேர் அதாவது 50 சதவீதம் பேர் தங்களை அழகு படுத்திக்கொள்வதில்  அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது .  கொரோனா வைரஸ் மனிதனை தனிமைப்படுத்தி உறவுகளின் அவசியத்தை உணர்த்தியுள்ள நிலையில் தனிமை தகாத உறவுகளுக்கும் மனிதனை தள்ளியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது
 .

click me!