வந்ததுமே வேலையை காட்டிய கிம் ஜாங் உன்... கொரிய எல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு..!

By vinoth kumar  |  First Published May 3, 2020, 6:01 PM IST

வடகொரிய அதிபர் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


வடகொரிய அதிபர் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அணு ஆயுத சோதனை என்ற பெயரில் வடகொரியா உலக நாடுகளை அவ்வப்போது மிரட்டி வருகிறது. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின்  அதிரடி நடவடிக்கைகள் உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் அடிக்கடி நடப்பதுதான். அந்த வகையில் உலக நாடுகள் கொரானோ அச்சத்தில் உறைந்து கிடக்கும் இன்றைய சூழலில், கடந்த 3 வாரங்களாக கிம்மை காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. 

Latest Videos

 எந்த பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், கிம் இறந்து விட்டார் என்று மற்றொரு தரப்பினரும் வதந்தி பரப்பி வந்தனர்.இந்த நிலையில் கிம் ஜாங் உன் நேற்று வடகொரியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதன் மூலமாக அவரது உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்தார். ஆனால் வெளியில் வந்தவுடன் கிம், தனது அதிரடி வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். 

நேற்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வடகொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

click me!