இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அமெரிக்கா வைத்த ஆப்பு...!! காரியக்கார ட்ரம்பின் கீழ்த்தர காரியம்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2020, 2:01 PM IST
Highlights

இந்தியாவும் ,  சீனாவும்  இன்னுமும் வளரும் நாடுகள் என்று சொல்லப்பட்டால் அமெரிக்காவும்  வளரும் நாடுதான் என்றும் ட்ரம்ப் காட்டமாக கூறினார். 

இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள் என்றால் அமெரிக்காவும்  வளரும் நாடுதான் என்ன அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கும் ,  சீனாவுக்கும்,   சலுகை காட்டி  வருவதாக குற்றம்சாட்டிய அவர் இவ்வாறு பேசினார் .  டாவோசில் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர் உலகப்  வர்த்தக அமைப்பில் ,  அமெரிக்காவுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக அவர் கூறினார் . 

தயவு செய்து  அமெரிக்காவுக்குத் கொஞ்சம் நியாயம் வழங்குமாறு கூறிய அவர்,   பல ஆண்டு காலமாக உலக வர்த்தக அமைப்பின் சலுகை விவகாரத்தில்  தனக்கு முரண்பாடு இருந்து வருவதாக குறிப்பிட்டார் .  பல துரைகளில் வளர்ச்சியடைந்துவிட்ட  இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்ற அடிப்படையில் இன்னமும் உலக வர்த்தக அமைப்பின் சலுகையை பயன்படுத்தி வருகின்றன, இதனால்  அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார் .  இந்தியாவும் ,  சீனாவும்  இன்னுமும் வளரும் நாடுகள் என்று சொல்லப்பட்டால் அமெரிக்காவும்  வளரும் நாடுதான் என்றும் ட்ரம்ப் காட்டமாக கூறினார். 

அமெரிக்காவுக்கு கொஞ்சம் நியாயம் செய்யுங்கள் என கேட்டுக்கொண்ட என்ற அவர்,   சீனா இந்தியா மீது உள்ள வெறுப்பை அவர் அப்பட்டமாக வெளிபடுத்தினார்.   அவரின் இந்த பேச்சு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . அதேபோல் அதிபர் என்ற அதிகாரத்தை தவறாக  பயன்படுத்த ட்ரம்ப் முயன்றார் என அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு செனட் சபையில் விசாரிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அவருக்காக  சட்ட நிபுணர்கள் வாதாடி வருகின்றனர் .  இதுகுறித்து கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப்,   தங்களது சார்பில் மிகச் சிறப்பான முறையில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது என பதில் அளித்தார்.   
 

click me!