அல்பாக்தாதிக்கு மறைவுக்குப்பின்….ஐஎஸ் அமைப்புக்கு புதிய தலைவர் அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jan 22, 2020, 6:06 PM IST
Highlights

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவினரால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் தலைவரான பாக்தாதி கொல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை திங்களன்று செய்தி வெளியிட்டது.

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா) தீவிரவாதிகள் அந்நாடுகளில் ஊடுருவினர். மேலும், பல நாடுகளில் பயங்கர குண்டுவெடிப்புகளை நடத்தி, உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர். சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான அமைப்பாக ஐ.எஸ். அமைப்பு கருதப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க படைகளின் தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். 


இந்த சூழலில் ஏறக்குறைய 3 மாதங்களுக்குப்பின் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளா, இரண்டு உளவுத் துறை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளதாக கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.  புதிய தலைவர் பெயர் அமீர் முஹம்மது அப்துல் ரகுமான் அல் மாவ்லி  அல் சாவ்லி என்றும், ஈராக்-துருக்கியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் அல் சாவ்லி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மோசூல் பல்கலைக்கழகத்தில் ஷாரியத் சட்டங்களில் பட்டம் பெற்றவர். ஈராக்கில் யாஜ்டிஸ் இனத்தவர் முழுக்க அழிக்கப்படவேண்டும் என்ற கருத்து பரவ காரணமாக இருந்தவர் அல் சாவ்லி. பாக்தாதி இறந்த சில நாட்களில் புதிய தலைவர் நியமிக்கப்பட்ட தாக கார்டியன்கூறியுள்ளது. பாக்தாதி மறைவுக்குப் பிறகு இஸ்லாமிக் ஸ்டேட் நிலைகுலைந்து விட்டது அதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட்ட தாக வெளியான செய்தியை நம்புவதற்கில்லை என்று சில அரசியல் வல்லுநர்கள் ெதரிவித்துள்ளனர்.

click me!