இன்னும் எவ்வளவு நாளைக்கு வைரஸ் பாதிப்பு என கணிக்கமுடியவில்லை..!! கைவிரித்த அமெரிக்க தொற்றுநோயியல் துறை..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 27, 2020, 12:17 PM IST

இந்நிலையில் இங்கிலாந்தில் 5 லட்சப் பேரும்,   அமெரிக்காவில் 2.2 மில்லியன் மக்களும் உயிரிழக்க கூடும் என கணித்துள்ளார் மாடலிங் ஆய்வுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார் ,  சி


அமெரிக்காவின் தொற்றுநோய் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என திட்டவட்டமாக சொல்ல முடியாது என அமெரிக்காவின் உயர்மட்டத் தொற்றுநோய் நிபுணரும் மருத்துவருமான டாக்டர் பிரிட்ஸ் கூறியுள்ளார்.  இந்த நோயை  துல்லியமாக கண்காணிப்பதே அதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழிமுறை என தெரிவித்துள்ள அவர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது மற்றும்  மக்கள் மத்தியில் கொரோனா  வைரஸ் பரிசோதனை அதிகப்படுத்துவதன் மூலம் ஓரளவுக்கு இதை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.  தற்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான் என அவர் கூறியுள்ளார் .  இப்போது வரை அமெரிக்கா செயல்படுவதை விட இனி சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

Latest Videos

இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து தரவுகளை சேகரித்து வரும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ,  சீனா மற்றும் இத்தாலியை கடந்து அமெரிக்காவில் சுமார் 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது .  இதுவரையில் அமெரிக்காவில் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என டாக்டர் பிரிட்ஸ் கூறியுள்ளார் ,  இந்நிலையில் சுமார் 14 சதவிகதம் பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,   86% பேர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி உள்ளவர்கள் என தெரிவித்துள்ளார்.  ஆனால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருமல் போன்ற  அறிகுறிகள் தென்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் . 

இந்நிலையில் இங்கிலாந்தில் 5 லட்சப் பேரும்,   அமெரிக்காவில் 2.2 மில்லியன் மக்களும் உயிரிழக்க கூடும் என கணித்துள்ளார் மாடலிங் ஆய்வுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார் ,  சில அமைப்புகள் கணிப்பு என்ற பெயரில் பாதிப்புகளை பெரிய அளவில்  மக்கள் மத்தியில் வெளியிடுகின்றனர்,  அது மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது . ஆனால்  இந்த வைரஸ் பாதிப்பை இதுவரை துல்லியமாக அளவிடும் அளவிற்கு தங்களிடம்  தரவுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் ,  அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களுக்கு ஐசியு படுக்கைகள் மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் தேவையான அளவில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். எந்த நிலையையும் எதிர் கொள்ள  அமெரிக்கா தயாராக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
 

click me!