இது ஒரு வாரத்திற்கு முன்னர் மொத்தத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8000 ஆயிரமாக இருந்தது , ஆனால் ஒரு வார இடைவெளியில் அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை பத்து மடங்காக உயர்ந்துள்ளது . ஒரே நாளில் சுமார் 273 பேர் உயிரிழந்துள்ளனர் .
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்து. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான சீனா இத்தாலியை கடந்து அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது . சீனாவில் வைரசால் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், இத்தாலியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 589 ஆக இருந்தது , இந்நிலையில் அமெரிக்காவில் 85 ஆயிரத்து 88 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் இந்த வைரசுக்கு அமெரிக்காவில் சுமார் 1, 290 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் அதிகம் பாதித்த சீனாவை அமெரிக்கா தற்போது முந்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலகின் மூன்றாவது மக்கள் தொகை கொண்ட நாடு வைரஸின் அடுத்த மையமாக மாறி உள்ளது எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 876 பேர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இது ஒரு வாரத்திற்கு முன்னர் மொத்தத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8000 ஆயிரமாக இருந்தது , ஆனால் ஒரு வார இடைவெளியில் அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை பத்து மடங்காக உயர்ந்துள்ளது . ஒரே நாளில் சுமார் 273 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் மிகமிக மோசமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் இறப்பு விகிதம் எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 250 பேர் , இத்தாலியில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 என்பது குறிப்பிடத்தக்கது , உலகிலேயே மக்கள் மத்தியில் அதிகம் சோதனையை நடத்தியது நாடு அமெரிக்கா தான் ஆனாலும் இந்த சோதனைக்கு கிடைத்துள்ள பரிசு மரணங்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார் இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்கனவே அவசர காலா பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் உணவு மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளை தயார் நிலையில் வைக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் 55 சதவீதம் பேர் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் நியூஜெர்சி மாகாணம் இருந்துவருகிறது அதேபோல் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களிலும் ஆரம்பக்கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்கா அதிர்ச்சி தெரவித்துள்ளது.