நியூயார்க்கில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்..!! தீவுகளை தேடி அலையும் அவலம்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 20, 2020, 1:26 PM IST

ஆண்டுக்கு சுமார் 16 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கான மிகப்பெரிய செல்வந்தர்களில் 1 சதவீதம் பேர் இப்போது மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும் குறிப்பாக பல விலை உயர்ந்த தீவுகளுக்கு அவர்கள் குடிபெயர்ந்து வருவதாகவும்  கூறப்படுகிறது. 


கொரோனா வைரஸால் உலகிலேயே மிக மோசமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியூயார்க் நகரத்திலிருந்து கடந்த  மார்ச் 1 முதல் மே 1 வரை சுமார் 4.20 லட்சம்  மக்கள்  வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன .  இது மொத்த நியூயார்க் மக்கள் தொகையில் 5% என கூறப்படுகிறது .  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . உலகளவில் சுமார் 49  லட்சத்து 89 ஆயிரம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன . அந்த வகையில் கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது . இதுவரை அங்கு 99 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ளனர் . உலக நாடுகளை இது திகிலடைய வைத்துள்ள நிலையில் அமெரிக்காவில்  மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகரமான நியூயார்க்கில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன . 

Latest Videos

உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக இருந்துவரும் நியூயார்க்கில் 3.50  லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு கிட்டத்தட்ட  28  ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நியூயார்க் நகரில் வசித்து வந்த  செல்வந்தர்கள் நகரை விட்டு வெளியேறி வருவதாக தகவல் கிடைத்துள்ளன .  கடந்த மார்ச் 1 முதல் மே 1 வரை நகரத்திலிருந்து சுமார் 4. 20 லட்சம் பேர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது .  இது நியூயார்க் நகரதின் மொத்த மக்கள் தொகையில் 5% எனவும்  கூறப்படுகிறது . வெளியேறியவர்களில்  பெரும்பாலானவர்கள் நகரத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் எனவும் கூறப்படுகிறது ,  ஆண்டுக்கு சுமார் 16 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கான மிகப்பெரிய செல்வந்தர்களில் 1 சதவீதம் பேர் இப்போது மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து  விட்டதாகவும் குறிப்பாக பல விலை உயர்ந்த தீவுகளுக்கு அவர்கள் குடிபெயர்ந்திருப்பதாகவும்  கூறப்படுகிறது.

 

அதேபோல் ஆண்டிற்கு 67 லட்சம் ரூபாய்   வரை சம்பாதிக்கும் 80% மக்கள் நகரத்தை விட்டு வெளியேறவில்லை என நியூயார்க் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர்  கிம் பிலிப்ஸ்-ஃபென் கூறுயுள்ளார் . கொரோனாவுக்கு  பின்னர் ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றன,  இங்கிருந்து வெளிவரும் பெரும்பாலான மக்கள் வெள்ளையர்கள்தான் ,  லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி விட்டதால் நியூயார்க்கில் விலையுயர்ந்த வீடுகள் கூட குறைந்த  வாடகைக்கு கிடைக்கிறது .  இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆனால்  அவ்வாறு இங்கு நடக்கவில்லை என தெரிவித்துள்ளார் . குறிப்பாக நியூயார்க் நகரத்தில் இருந்து வெளியேறிய பெரும்பாலான பணக்காரர்கள்  தீவுகள் மற்றும் நகரங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர் . தெற்கு புளோரிடா, கனெக்டிகட், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, மார்தா வைன்யார்ட், கேப் கோட், ரோட் தீவு, ஹாம்ப்டன், ஹட்சன் பள்ளத்தாக்கு மற்றும் ஜெர்சி ஷோர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் ,அவர்கள் இப்போது 'கொரோனா வைரஸ் அகதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
 

click me!