ஒரு மணி நேரத்தில் சீனாவை சாம்பலாக்க அதிநவீன ஏவுகணை தயார்..!! சொல்லாமல் சொன்ன ட்ரம்ப்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 20, 2020, 11:53 AM IST

நியூயார்க்கில் இருந்து ஏவப்படும் ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒரு மணி நேரத்திற்குள் சீன தலைநகர் பெய்ஜிங்கை தாக்கி அழிக்கும் என கூறப்படுகிறது . 
 


அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்கு  அவசர அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது, அதன் அடிப்படையில்  டிரம்ப் திடீரென சீனாவை மிரட்டும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள்  கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில். டிரம்பின் இந்த அறிவிப்பு சீனாவை மட்டுமின்ற ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பு என்னவென்றால்  எந்த நாட்டிலும் இல்லாத அளவுக் அதி சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளது என்பது தான் அது . ஏற்கனவே  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் பதற்றம் போருக்கான சூழலை உருவாக்கியுள்ள நிலையில் ,  சீனாவுக்கு எதிரான ஆயுதமாகவே   அமெரிக்கா இதை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது .  இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  ' இதற்கு முன்பு யாரும் பார்த்திராத அதிசக்தி வாய்ந்த ஏவுகணை இப்போது எங்களிடம் உள்ளது.   நாங்கள் ஏற்கனவே சூப்பர் ஏவுகணை என்று இதற்கு பெயரிட்டுள்ளோம், இது  மற்ற நாடுகளிடம் உள்ள ஏவுகணைகளை விட 17 மடங்கு வேகமாக செயல்படக்கூடியது . 

Latest Videos

ரஷ்யாவில் 5 மடங்கு வேகம் கொண்ட ஏவுகணையும் ,  சீனாவிடம் 6 மடங்கு வேகம் கொண்ட ஏவுகணையும் இருப்பதாக  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால்  நாங்கள் 17 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணையை இப்போது தயாரித்துள்ளோம் .  இதுவே  உலகின் மிக அதிவேகமான ஏவுகணை. ரஷ்யா மற்றும் சீனாவிடமுள்ள ஏவுகணைகளைவிட வேகமாக தாக்கி அழிக்கக்கூடியது என டிரம்ப் கூறுயுள்ளார்.  இது ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது,  உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் நிலையில் அமெரிக்கா ஏன் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை குறித்து அறிவிப்பு செய்கிறது.?  ட்ரம்ப் ஏன் தங்களிடம் உள்ள  ஏவுகணை ரஷ்யா மற்றும் சீனாவை விட வேகமானது என்று கூறுகிறார் என பல கேள்விகள் எழுகின்றன. முன்னதாக  ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் வேகம் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். ஒலியின் வேகம் மணிக்கு 1238 கி.மீ என்றால்  இது மணிக்கு 15000 மைல் என்ற இலக்கை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் ,  அதாவது 60 நிமிடங்களில் 24140 கி.மீ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் என்றும் ,  நியூயார்க்கில் இருந்து ஏவப்படும் ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒரு மணி நேரத்திற்குள் சீன தலைநகர் பெய்ஜிங்கை தாக்கி அழிக்கும் என கூறப்படுகிறது . 

 இதனால்தான் தன்னிடம் இருப்பது சூப்பர் டூப்பர் ஏவுகணை என்றும்  17 மடங்கு வேகமானது என்றும் ட்ரம்ப் நெஞ்சை நிமிர்த்துகிறார். இதன் மூலம் அமெரிக்கா ஒரு சில நிமிடங்களில் ஒட்டு மொத்த  சீனாவையும் அழிக்க முடியும் என கூறப்படுகிறது . ரஷ்யாவிலும் இதுபோன்ற ஒரு ஏவுகணை உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஏவுகணையின் பெயர் அவன்கார்ட்,  இதுவும் ஒரு ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைதான் , அதாவது சில மணிநேரங்களில் பூமியின் எந்த மூலையிலும் உள்ள ஒரு பகுதியை தாக்கி அழிக்க கூடியது.  ஆனால்  இப்போது தங்களிடம் உள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில்   ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுமில்லை என்று டிரம்ப் கூறுகிறார். ஏனெனில் அமெரிக்காவிடம் உள்ள ஏவுகணை  எதிரிகள் சுதாரிப்பதற்குள் அவர்கள் இருக்கும் இடத்தை சாம்பலாக்க வல்லது என்பதுதான் அது. மொத்தத்தில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வரிசைப்படுத்திய முதல் நாடு சீனா. கடந்த ஆண்டு, சீனா தனது தேசிய இராணுவ அணிவகுப்பில் டி.எஃப் -17 ஏவுகணையை காட்சிபடுத்தியது . இதுவே முதல்  ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இதன் பின்னர், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரித்துள்ளதாக ரஷ்யா கூறியது.  2022 க்குள் அமெரிக்க இராணுவமும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கும் என ட்ரம்ப் அறிவித்தார் . அதே நேரத்தில், இந்தியாவின் டிஆர்டிஓவும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது. 

தற்போது  ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கி விட்டது என்றும் ,  அது உலகில் உள்ள மற்ற ஏவுகணைகளை விட 17 மடங்கு அதி வேகம் கொண்டது எனவும்  டிரம்ப் அறிவிப்பு செய்திருப்பது,  உலக நாடுகளை ஒருஆயுதப் போட்டிக்கு அழைப்பது போல உள்ளது என  கருதப்படுகிறது. கொரோனாவை எதிர்த்துப் போராடும் அமெரிக்கா தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஏன் இவ்வளவு அவசர அவரசமாக இதை அறிவிப்பு செய்ய  வேண்டும்  என உலக நாடுகள் மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது . இது ரஷ்யாவையும் குறிப்பாக சீனாவையும் தனது சூப்பர் டூப்பர் ஆயுதத்தால் அச்சுறுத்த ட்ரம்ப் நினைக்கிறார்  என கூறப்படும் அதேவைளையில் ,   சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள  தைவானை அமெரிக்கா ஆதரித்து வரும் நிலையில் சீனா ஒரு வேளை தைவானை தாக்கினால், அதை அமெரிக்காவால் காப்பாற்ற முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ஏற்கனவே  தெரிவித்துள்ளன.  இந்நிலையில் .  தைவானுக்கு எதிராக போர் நடந்தால், அமெரிக்கா சீனாவிடம் தோற்றதாகிவிடும்  அமெரிக்கா சீனாவிடம் தோற்றது என்ற செய்தியை அமெரிக்கா ஒரு போதும் விரும்பவில்லை ,  எனவேதான் தற்போது அமெரிக்கா இந்த மூர்க்கத்தனமாக அறிவிப்பை செய்கிறது  என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சீனாமீது கடுங்கோபத்தில் உள்ள அமெரிக்கா சீனாவை வம்பிழுக்க தைவானை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.  
 

click me!