மருந்து ரெடி , கொரோனாவுக்கு முடிவுரை... மனித சோதனையில் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2020, 11:09 AM IST
Highlights

பொதுவாக எந்த ஒரு தடுப்பூசியும் சில பக்க விளைவுகளை கொண்டிருப்பதைப் போலவே இந்த தடுப்பூசியிலும் சிறிய பக்க விளைவுகள் தென்படுகின்றன ,  ஆனால் அது தீவிரமானது அல்ல எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ,  முதல்முறையாக மனிதர்களிடம் நடத்திய சோதனையில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து நல்ல பலனை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான மாடர்னா தகவல் தெரிவித்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது .  இதுவரை 48 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.   இந்த கொடிய வைரசுக்கு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது . இந்நிலையில் அது தொடர்பான ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது .  கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கொரோனாவுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  ஈடுபட்டுள்ளன . அதில் சுமார் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிறுவனங்கள் மூலம் சுமார் நூற்றுக்கணக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அது நோய் பாதித்தவர்கள் மத்தியிலும் தன்னார்வலர்களிடமும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது . 

 இந்நிலையில் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான மாடர்னா கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடித்துள்ள மருந்தினை ஏற்கனவே விலங்குகளுக்கு செலுத்தி அதில் வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதித்த 45  பேருக்கு  மருத்துவ பரிசோதனை அல்லது மனித பரிசோதனை நடத்தியதாக கூறி உள்ளது . அதாவது அமெரிக்காவின் சியாட்டிலில் தன்னார்வலர்களின் 8 குழுக்களில்  மனித சோதனை செய்யப்பட்டது.  கடந்த மார்ச் மாதம் முதல் பரிசோதனை நடைபெற்று வந்தது .  இதில் தாங்கள் தயாரித்த தடுப்பு  மருந்தை நோய் பாதித்தவர்களுக்கு  பயன்படுத்தியதில்  அவர்கள் உடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகவும்,   எதிர்பார்த்த அளவுக்கு ஆராய்ச்சியில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த  தடுப்பூசியால் உடலில் ஆன்டிபாடிகள் தயாரிக்கப்படுவதாகும் நோயாளிகள் உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி  குணப்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த தடுப்பூசி  பயன்பாடு முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .   பொதுவாக எந்த ஒரு தடுப்பூசியும் சில பக்க விளைவுகளை கொண்டிருப்பதைப் போலவே இந்த தடுப்பூசியிலும் சிறிய பக்க விளைவுகள் தென்படுகின்றன ,  ஆனால் அது தீவிரமானது அல்ல எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . 

 முதற்கட்டமாக எட்டு  குழுக்களிடம் நடத்தப்பட்ட இதன் இரண்டாம் கட்ட சோதனை சுமார் 600 தன்னார்வலர்களிடம்  நடத்தப்பட உள்ளது.  பின்னர் மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை ஜூலை மாதம்  தொடங்கப்படும் எனவும் மிக விரைவில் மனித பரிசோதனை நிறைவுற்று மருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் மாடர்னா கூறியுள்ளது .  அதேபோல் அமெரிக்காவுக்கு இணையாக சீன மருத்துவ நிறுவனங்களும் கொரோனா  தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன .  இந்நிலையில் பீஜிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஆன்டிபாடி மருந்து ,  நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து குணமளிப்பதுடன் அவர்களது உடலில் குறுகிய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .   இது விலங்குகளிடம்  நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிகரமான பலனைத் தந்தது எனவும் மனித உடலில் வைரஸ் தொற்று செல்களை தடுக்கும் வகையில் மனித சக்தியை அதிகரிப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் .  நோயில் இருந்து மீண்ட  மனித உடலில் உருவாகும் நடுநிலையான ஆன்டிபாடிகளை பிரித்தெடுத்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் ,  இந்த ஆன்டிபாடிகள் தொற்று நோயை தடுக்கும் சிறப்பு மருந்தாக செயல்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் .  இந்தியாவும் இதற்கான மருந்து கண்டுபிடிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மருந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 

 

click me!