பெண் செய்தியாளரின் அந்த இடத்தில் கை வைத்த அமைச்சர்..!! வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 14, 2019, 4:55 PM IST
Highlights

அந்தப் பெண் செய்தியாளர் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த ஒரு அமைச்சர்  அந்தப் பெண்ணின் தொடையில் தட்டி விட்டு செல்லுவது பதிவாகியுள்ளது.
 

நேரலையில் செய்தி வழங்கி கொண்டிருந்த பெண் நிருபரின் பின்னால் தட்டி அமைச்சர் அத்துமீறி இருப்பது  அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பெண்கள் பல துறைகளில் பணிகளை ஏற்று சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நிலையில் ,  ஊடகத் துறையிலும் தவிர்க்க முடியாத சக்திகளாக உருவாகி வருகின்றனர் .  ஆனால் ஊடகத்துறையில் பெண்கள் ஈடுபடுவது அவ்வளவு சாமானியமான காரியமல்ல .  அதற்கு அவர்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது .  அப்படிப்பட்ட சூழ்நிலையில் களத்திற்கு வந்து செய்தி வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் செய்தியாளரிடம் அமைச்சர் நடந்து கொண்டிருக்கும் விதம் பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது . 

அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது அதை அனைத்து சேனல்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர் .  அப்போது ஒரு தொலைக்காட்சியை சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தனது செய்தி சேனலுக்கு  பிரத்தியேகமாக நேரலை வழங்கிக் கொண்டிருந்தார் .  அப்போது பின்னால் ஓடிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கேமராவை பார்த்து உற்சாகமாக கையசைத்து நேயர்களுக்கு ஹாய் சென்னபடி  கடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்பொழுது திடீரென அந்த பெண்ணின் பின்னால் யாரோ தட்டுவது போல  அவர் உணர்ந்தார் ஒருகணம் செய்தி வழங்குவதை நிறுத்தி விட்டு ஆ...வென பார்த்தார் அந்த பெண்... இந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.   அந்தப் பெண் செய்தியாளர் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த ஒரு அமைச்சர்  அந்தப் பெண்ணின் தொடையில் தட்டி விட்டு செல்லுவது பதிவாகியுள்ளது. 

பின்னர் சுதாரித்துக்கொண்டு அந்த செய்தியாளர் ஒரு சில வினாடிகளில் மீண்டும் பேசத் தொடங்கினார் பெண் செய்தியாளருக்கு நேரலையில் இதுபோன்ற  மோசமான சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  அந்த பெண் செய்தியாளரை பின்னால்  தட்டியது யார் என்பது பின்னர் தற்போது தெரியவந்துள்ளது .  அவர் ஜார்ஜியா மாகாணத்தின்  இளைஞர் நலத்துறை அமைச்சர்  என்பது உறுதியாகி உள்ளது .  அமைச்சரே  இப்படி செய்தியாளரிடத்தில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது அமெரிக்காவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

 

click me!