மருத்துவ பொருட்களை சீனா அனுப்பி வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் , சில சமயங்களில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களில் இருந்து அவைகள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார் .
அண்டை நாடுகளை கொடுமைப் படுத்துவதற்காக சீனா கொரோனாவைரசை பயன்படுத்திக் கொண்டது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மீண்டும் சீனா மீது பாய்ந்துள்ளார். சீனா மருத்துவ பொருட்கள் வழங்குவதை வரவேற்ற அதேநேரத்தில் அவர் சீனாவை இவ்வாறு விமர்சித்துள்ளார் . கொரோனாவால், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்து இருக்கக் கூடுமென சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது அமெரிக்கா சீனா இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது . இந் நிலையில் அமெரிக்காவின் மூத்த முன்னணி அதிகாரிகள் தொடர்ந்து சீனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார் சீனா அண்டை நாடுகளை கொடுமை படுத்துவதற்கு வைரஸை பயன்படுத்திக்கொண்டது என குற்றம் சாட்டியுள்ளார் . உலக சுகாதார அமைப்பின் விதிமுறை மீறி சீனா நடந்து கொண்னுள்ளது. குறிப்பாக வைரஸ் பரவலை சரியான நேரத்தில் உலகுக்கு அறிவிக்க அத் தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார் . அதுதான் இந்த உலகம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும், புதிய வைரஸ் மாதிரிகளை பரிசோதனைசெய்வதை சீனா நிறுத்தி உள்ளதாகவும் , பழைய மாதிரிகளை அது அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார் . இதனால் இந்த நோயின் பரிமாண வளர்ச்சியை கண்காணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாம்பியோ தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டது , சீனாவில் வைரஸ் தோன்றியபோதே உலகிற்கு அதை சொல்லாமல் மூடி மறைத்து விட்டது
.
இதனால் நோய் ஆபத்தை உலக நாடுகள் அறிந்து கொள்ள முடியாமல் போனது என தெரிவித்துள்ளார் . கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சீனா வெளியிடுவதற்கு மறுத்துவிட்டது உலக சுகாதார நிறுவனமும் அதை தட்டிக்கேட்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது , உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், வுஹான் வைராலஜி ஆய்வுகூடத்தின் பாதுகாப்பு தரத்தை கவனிக்க , பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டார் , தனது முழு திறனையும் பயன்படுத்த அவர் தவறி விட்டார் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு மருந்து பொருட்களை அனுப்பி வைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாம்பியோ. மருத்துவ பொருட்களை சீனா அனுப்பி வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் , சில சமயங்களில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களில் இருந்து அவைகள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சர்வதேச வர்த்தக விதிகளின்படி ஒப்பந்த கடமைகளின் படி தொடர்ந்து எங்களுக்கு அந்த மருந்து பொருட்களை வாங்குவதற்கும் , எங்களுக்கு அதை விற்பனை செய்வதற்கும் வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என தெரிவித்துள்ளார் . மைக் பாம்பியோவை போலவே வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவரோ சீனாவில் கடுமையாக தாக்கியுள்ளார் , அதாவது சீனா ஆரம்பகாலக் ஒரு நோய் தடுப்பு பற்றிய தரவுகளை நிறுத்தி வைக்ககூடும் ஏனெனில் ஒரு தடுப்பூசி உருவாக்கவும் அதன் வணிகப் போட்டியை வெல்லவும் அது விரும்பியது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.