ஒற்றைப் பேட்டியில் உலகை அதிரவைத்த அமெரிக்கா..!! சீனா பற்றி அடுக்கடுக்காக உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி தகவல்

By Ezhilarasan BabuFirst Published May 4, 2020, 2:16 PM IST
Highlights

அதுமட்டுமின்றி வைரஸ் பரவியபோது  திட்டமிட்டே சீனா அதை   மூடி மறைத்து விட்டது எனவும் உலக சுகாதார நிறுவனத்தையும் சீனா தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொண்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார் . 

கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான் எனவும் அதற்கு தன்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியே தெரிவித்துள்ளார்.   வைரஸை பரப்பியது சீனாதான்  என தொடர்ந்து அமெரிக்கா கூறி வரும் நிலையில்,  மீண்டும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை  அமைச்சர் மைக் பாம்பியோ இவ்வாறு கூறியுள்ளார், அவரின் கருத்து உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸ் அமெரிக்காவையே  மிக மோசமாக தாக்கி வருகிறது,  இதுவரை உலக அளவில் 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது .  அதில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  இரண்டரை லட்சத்தை நெருங்கியுள்ளது.  உலக அளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தையும் கடந்துள்ளது. 

இதுவரை சுமார் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் , சீனா தெரிந்தோ தெரியாமலோ இந்த வைரஸை பரப்பியிருக்கக் கூடுமென அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது ,  இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன்,  ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன,  ஆனால்  சீனா இப்புகாரை  முற்றிலுமாக மறுத்துள்ளது ,  சீனா இதை இல்லை என மறுத்தாலும் சீனா குறித்து  முழுமையான விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர்  ட்ரம்ப்   சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுக்கூடம் குறித்து  விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அந்நாட்டு உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,  இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் .  அதில், கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு  பேரழிவை ஏற்படுத்தி வருவதற்கு சீனா தான் காரணம்  ,  சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியது ,  அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் நிறைய உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போதைக்கு அந்த ஆதாரங்களை  வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்,   அமெரிக்க உளவுத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில்  இத்தகவல்கள் தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .  அதுமட்டுமின்றி வைரஸ் பரவியபோது அதை  திட்டமிட்டே சீனா   மூடி மறைத்து விட்டது எனவும் உலக சுகாதார நிறுவனத்தையும் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார் .  ஆனால் இதுகுறித்து தெரிவிக்கும் அமெரிக்க அரசியல் வல்லுநர்களும்  எதிர் வரும் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு  செல்வாக்கு குறைந்து வருகிறது ,  அவர் தோல்வி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தினாலும்  வைரஸை முறையாகக் கையாளவில்லை என அவர்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவும்  அவர் சீனா மீது இப்படி பழி போடும் வேலையில் இறங்கியுள்ளார் . இதனால் அமெரிக்க ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வேலைகளிலும் அவர் இறங்கியுள்ளார் என அவர் மீது குறை கூறுகின்றனர் .  

 

click me!