இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன… கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை …

Asianet News Tamil  
Published : Jun 26, 2017, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன… கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை …

சுருக்கம்

american companies ready to invest...sundar pictchai

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் முதல்முறை அரசுமுறைப் பயணமாக  மோடி அமெரிக்கா  சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

இதில்  கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி   குக், அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் அமெரிக்க  நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பாக மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை,

கூட்டம் முடிந்த பின் பேட்டியளித்த சுந்தர் பிச்சை கூறியதாவது : ‛‛ இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது - சுந்தர் பிச்சை

இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன . எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம்.

பல முக்கிய மாற்றங்களுக்கு இந்த கூட்டம் ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன் .

இந்தியாவில் வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ., டிம் குக், அமேசான் சி.இ.ஓ., ஜெப் பிகோஸ் அடோப் நிறுவன சி.இ.ஓ., சாந்தனு நாராயணன், கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, உள்ளிட்ட 21 முக்கிய நிறுவனங்களை சேர்ந்த சி.இ.ஓ,.க்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

கனடாவில் பயங்கரம்! டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!
இனி WFH செட் ஆகாது! 100 பேர் செய்யுற வேலையை ஈசியா முடிக்கும் AI.. கூகுள் விஞ்ஞானி எச்சரிக்கை