
லண்டனில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக தற்கொலை செய்வதற்கு முன், எழுதப்படும் கடிதம் போல் எழுதிக்கொண்டு வர ஆசிரியர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்பெத்
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாவலில், மெக்பத் தற்கொலை செய்யும் முன் கடிதம் எழுதுவார். அதேபோல் எழுதி வரக் கூறியுள்ளார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
60 மாணவர்கள்
லண்டன், கிட்புரூக், பகுதியில் தாமஸ் தலிஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு வகுப்பில் படிக்கும் 60 மாணவ, மாணவிகளுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாவல் குறித்து ஒரு ஆசிரியை பாடம் எடுத்துள்ளார்.
தற்கொலைக் கடிதம்
அப்போது, கதையின் கடையில் நாயகி மெக்பெத், தற்கொலை செய்யும் முன் கடிதம் எழுவார். அதே போன்று கடிதம் எழுதிக்கொண்டு வர வேண்டும் என்று அந்த ஆசிரியை மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தார்.
அதிர்ச்சி
இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம் தற்கொலைக் கடிதம் எப்படி எழுதுவது, யாருக்கு எழுவது என்பது குறித்து கேட்டுள்ளனர். இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, மறுநாள் பள்ளிநிர்வாகத்திடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது பள்ளி நிர்வாகத்திடம் கூறிய பெற்றோர்கள், “ ஆசிரியரின் இந்த செயலால் எங்கள் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
மனரீதியாக பாதிப்பு
இது குறித்து ஒரு மாணவரின் பெற்றோர் கூறுகையில், “ என் மகன் என்னிடம் வந்து எனக்கு 3 நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள் நான்தற்கொலை செய்தால் அவர்களை இழக்கநேரிடும் என்கிறான். மாணவர்களுக்கு இதுபோன்ற வீட்டுப்பாடம் கொடுப்பது ஆசிரியர்களின் செயலற்ற திறனையும், அறிவற்ற செயலையும் காட்டுகிறது. இதுபோன்று முட்டாள்தனமாக ஏன் கற்பிக்கிறார்கள் எனத் ெதரியவில்லை’’ என்றார்.
மன்னிப்பு
இதையடுத்து, பெற்றோர்களைச் சந்தித்த பள்ளியின் முதல்வர் கரோலின் ராபர்ட்ஸ் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்புகோரினார். மேலும், மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் இதுபோன்ற வீட்டுப்பாடங்களை எதிர்காலத்தில் கொடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதியளித்தார்.