அமெரிக்காவையே எதிர்க்க துணிந்த பாகிஸ்தான்..!! விமானங்களுக்கு எச்சரிக்கை, உளவுத்துறை தகவலால் பரபரப்பு...!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 3, 2020, 3:16 PM IST

இனி போக்குவரத்திற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் ,  பாகிஸ்தான் வான்வெளியில் பயணிக்கும்போது அங்கு முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாக  வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க  விமான  நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் அமெரிக்க விமானங்களை தாக்கக்கூடும் என்பதால் இவ்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய ராணுவத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள  நவரானே இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.

Latest Videos

இது குறித்து விவரமாக  அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ள அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து மற்றும் கண்காணிக்கும் அமைப்பான பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு ,  இனி போக்குவரத்திற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் ,  பாகிஸ்தான் வான்வெளியில் பயணிக்கும்போது அங்கு முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாக  வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  ஆகவே பாகிஸ்தான் வான்வெளியை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.  பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மகாம்கள்  முன்போலவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன .  இவர்களால் அமெரிக்க விமானங்கள்  தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பயணிகள் மற்றும் விமானிகள்   பாதுகாப்பு காரணம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது அறிவுறுத்தப்படுகிறது என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் முகாமிட்டிருந்த நிலைகளில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பால்கோட் பகுதியில் அத்தீவிரவாத முகாம்களை அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது .  ஆனாலும் மீண்டும் அதே இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் முளைத்துள்ளதாக  இந்திய உளவுத் துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது . 

click me!