தற்போது மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க உறுதி கொண்டுள்ளதால் எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது சாத்தியப்படுகிறது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ தளபதி ஜெனரல் நவரானே தகவல் தெரிவித்துள்ளார் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்குள் ஊடுருவ எல்லையில் முகாமிட்டு தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் எல்லையான பால்கோட்டுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன, ஆனாலும் அதே இடத்தில் மீண்டும் தீவிரவாத முகாம்கள் முளைத்துள்ளதாக இந்திய உளவுத்துறை பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளன . இந்நிலையில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவத் தளபதி ஜெனரல் நவரானே கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது, தீவிரவாதம் என்ற பிரச்சினை எதிர்கொள்வது இந்தியாவுக்கு புதியதல்ல, இந்திய ராணுவ வீரர்கள் அதே எதிர்கொண்டு வருகின்றனர், தற்போது மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க உறுதி கொண்டுள்ளதால் எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது சாத்தியப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுமா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராணுவ ஜெனரல், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றார், அதாவது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .