கொக்கரித்த ட்ரம்ப்... சுழற்றி அடித்த அமெரிக்கப்படை...!! துடிதுடித்து விழுந்த ராணுவத் தளபதி..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2020, 2:36 PM IST
Highlights

இதுதொடர்பாக தெரிவித்துள்ளார் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ,  வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அதிபர் டிரம்ப் பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர். 

அமெரிக்கப் படையினர் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானின் உள்ளிட்ட 7 பேர் சுட்டு  கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ,  ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று அவர்களின் இறப்பை உறுதிசெய்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஈரான் ஆதரவுபெற்ற பங்கரவாதிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.  அதில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.

 இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா,  இத்தாக்குதலுக்கு  ஈரான் தான்  பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்திருந்தது.  இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும்  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் அமெரிக்க விமானப்படை ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியது,  அதில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர் .  இதுதொடர்பாக தெரிவித்துள்ளார் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ,  வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அதிபர் டிரம்ப் பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர். 

ஏற்கனவே அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த  காசிம் சுலைமானி இதில் கொல்லப்பட்டுள்ளார் ,  இவர் ஈரான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில் அமெரிக்க விமானப்படை  தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர் .  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . 
 

click me!