வென்டிலேட்டர்கள் உற்பத்தியில் அமெரிக்கா தீவிரம்..!! உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதாக ட்ரம்ப் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2020, 1:11 PM IST
Highlights

இதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் 1 லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தரவேண்டும் என அந்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சாலைகளுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார் .  இந்நிலையில்  கடந்த வாரம் முதற்கட்டமாக 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவையான அதிபர் உத்தரவிட்டார்.  

தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்பட்டும் மொத்த வெண்டிலேட்டர்களையும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ,  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர் களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரி ழப்பை ஏற்படுத்தி வருகிறது.  இதுவரையில் உலக அளவில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 கடந்துள்ளது .  சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கொரோனாவால் பாதிப்பவர்களின்  எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . 

கொரோனா அதிகம் பாதித்த நாடு என்ற நிலையை அமெரிக்கா அடைந்துள்ளது .  அமெரிக்காவில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  அங்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .  அமெரிக்க மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது ,  கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்த வைரஸால் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அமெரிக்காவில் எழுந்துள்ளது . இந்ந நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியுயார்க்,  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது , முதற்கட்டமாக 30 ஆயிரம் வென்டிலேட்டர்ள் தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.  இதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் 1 லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தரவேண்டும் என அந்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சாலைகளுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார் .  இந்நிலையில்  கடந்த வாரம் முதற்கட்டமாக 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள்  தேவையான அதிபர் உத்தரவிட்டார்.  

திடீரென வென்டிலேட்டர் தேவை என உத்தரவிட்டதால் தொழில் நிறுவனங்கள், அதிருப்தி தெரிவித்தன , பின்னர் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர்.  பல்வேறு தடைகளைக் கடந்து வென்டிலேட்டர் உற்பத்தியில் அந்நாட்டு நிறுவனங்கள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர் நியூஜெர்சியில்  உள்ள ஒரு குடோனில் சேகரித்து பின்னர் அது காலதாமதாமாக  நியூயார்க்குக்கு கொண்டு வரப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்தது .   இந்நிலையில் அதை முற்றிலுமாக மறுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  உற்பத்தி செய்யப்படும் வென்டிலேட்டர்கள் அனைத்தும் எந்தெந்த மருத்துவமனைக்கு தேவைப்படுகிறதோ அந்த மருத்துவமனைகளுக்கும் நேரடியாகக் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.   மருத்துவமனைகளுக்கு போக மீதமுள்ள வெண்டிலேட்டர்கள் மட்டுமே நியுஜெர்ஸியில் உள்ள குடோனில் சேகரித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

click me!