சீனர்களை திருடர்கள் என இழிவுபடுத்தும் அமெரிக்கா..!! ஜி ஜின் பிங்குக்கு நேர்ந்த அவமானம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 4:22 PM IST
Highlights

அமெரிக்கா இதை இனியும் ஊக்கப்படுத்தாது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு சீனா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்யவரும் சில சந்தேகப்படும் பட்டதாரி மாணவர்களின் விசாக்கள் நிறுத்தி வைக்கப்படும் என  அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, அமெரிக்க தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் சீனாவின் முயற்சிகளை பொறுத்துக் கொள்ளமாட்டோம் என கூறியுள்ளார். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீனாவின் வுபே மாகாணம் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் உருவாகி அது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா உருவானது, அது சந்தையிலிருந்து உருவாகவில்லை என்று அதிபரிடம் ட்ரம்ப்குற்றம் சாட்டி வருகிறார். 

ஏற்கனவே பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் இருந்து வந்தநிலையில், பொருளாதாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரத்தை  கட்டுப்படுத்துவதன் மூலமே, அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என முடிவு செய்துள்ள அமெரிக்கா, அந்நாட்டிற்கு எதிரான வேலைகளில் இறங்கி உள்ளது. அதேபோல் தென்சீனக் கடல் பகுதி, ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு வருவது சீனாவை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பயில வரும் சீன மாணவர்களுக்கு தடை விதிக்க போவதாகவும்,  அவர்களது விசாவை ரத்து செய்யப்போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் மாணவர்கள் இங்கு தொழில்நுட்பம் பயின்று மீண்டும் அவர்கள் நாட்டுக்குச் சென்றவுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுகின்றனர், அமெரிக்கா இதை இனியும் ஊக்கப்படுத்தாது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு சீனா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, அமெரிக்க தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் சீனாவின் முயற்சியை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம். சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் சில பட்டதாரி மாணவர்களையும், சீன நாட்டினரையும், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார். மேலும் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பை  பாதுகாப்பதில் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது என்ற அவர்,  அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துக்களையும் எங்கள் கல்வி நிறுவனத்திடமிருந்து சீன ராணுவ ஆராய்ச்சி வசதிகளுக்காக சட்டவிரோதமாக திருடும் முயற்சிகளை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ளமாட்டோம் எனவும், அமெரிக்காவில் ஆய்வு செய்ய அல்லது ஆய்வு நடத்த எஃப் அல்லது ஜே விசாவில் சீன நாட்டவர் அமெரிக்காவிற்குள் நுழைவது  தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3.60 லட்சம் மாணவர்கள் சீனாவிலிருந்து  கல்வி பயில வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!