அமெரிக்காவை கதி கலங்க வைக்கும் ஈரான்..!! சுலைமானியின் உருவப்படத்தை படம்பிடித்து அனுப்பும் செயற்கைக்கோள்...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 10, 2020, 12:38 PM IST

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி  சிர்மோர்க் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ கவுண்டவுன் தொடங்கியுள்ளது .


ஒருபுறம்  அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டே மறுபுறம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுனை ஈரான் தொடங்கியுள்ளது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சி படை தளபதி  காசிம் சுலைமானி அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார் ,  அவர் அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத சதியில் ஈடுபட்டுவந்ததால்  அவரை கொன்றதாக அமெரிக்கா தெரிவித்தது .   இந்நிலையில் அமெரிக்கா ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது .  அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஈரான் , அமெரிக்க ராணுவ  தளவாடங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது  . 

Latest Videos

இதனால் அமெரிக்கா ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது இந்நிலையில் ஈரான் தனது உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்காக  சிறு மோர்க் என்ற ராக்கெட்டை தயாரித்து உள்ளது ,  இதன்மூலம் செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி அணு குண்டுகளை வீச முடியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி  சிர்மோர்க் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ கவுண்டவுன் தொடங்கியுள்ளது . இதற்கு முன்னர் இதே போன்ற ஒரு ராக்கெட்டை ஈரான் ஏவியபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை ஈரான் மீறிவிட்டது என குற்றம்சாட்டியது .  

அதற்கு பதிலளித்த ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை ,  அமைதியான முறையில்தான் நாங்கள் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் .  இது விதிமீறல் அல்ல எனக் கூறியதுடன்,  இந்நிலையில் சுமார் 113 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை பூமிக்கு மேலே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது .  இந்த செயற்கைக்கோள் பூமியை படம் பிடிக்கவும் பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகளை சமாளிக்க விவசாயத்தை மேம்படுத்தவும் உதவும் என ஈரான் தெரிவித்துள்ளது .  நிச்சயம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது சமீபத்தில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானின் புகைப்படத்தை பூமிக்கு அது முதல் படமாக அனுப்பும் என்று ஈரான் அறிவித்துள்ளது இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . 

 

 

click me!