வல்லரசுகளை எல்லாம் பதம் பார்த்த கொரோனா...!! இந்த ஒரு நாட்டிக்கிட்ட மட்டும் ஜம்பம் பலிக்கல..??

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2020, 12:41 PM IST
Highlights

கடந்த பிப்ரவரி 13 பின்பு தங்கள் நாட்டில் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளதுடன்,

வியட்நாமில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரையும் குணப்படுத்திவிட்டதாக  அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது உலகமே கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க போராடி வரும் நிலையில் வியட்நாம்  இந்த மகிழ்ச்சிகர  தகவலை தெரிவித்துள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .  இதுவரையில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  சுமார் 4 லட்சம் பேர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  அமெரிக்கா,  இத்தாலி , ஈரான்,  உள்ளிட்ட நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பிக்க போராடி வருகின்றனர் . இந்நிலையில்  வியட்நாமின் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பேரும் குணப்படுத்தப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது . 

சிகிச்சையில் இருந்த  கடைசி நோயாளியும்  கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. அந்த நபர் வின் புஃக் மாகாணத்தில் வசிக்கும் 50 வயதானவர் எனவும் , அந்நபர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி  தன் மனைவி மற்றும் மகள்களுடன் மத்திய சீனாவில் உள்ள வூக்கனுக்கு  சென்று திரும்பியவர் என்றும் தெரிவித்துள்ளது,   அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் இந்நிலையில் அவரும் குணமடைந்து வீடு திரும்பியதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் வேகமாக பரவுவதை  உணர்ந்துகொண்ட வியட்நாம் அரசு,   கடந்த பிப்ரவரி 13 பின்பு தங்கள் நாட்டில் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளதுடன்,  உலகெங்கிலும் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்துகொண்ட வியட்நாம் பிரதமர் நுயேன்
ஜூவான் புஃக் கொரோனா  வைரஸ் பாதிப்பு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கையிலெடுத்தார் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்கள் நாட்டுக்குள் நுழையும்போது  முறையான மருத்துவ சான்று வழங்க வேண்டும் ,  அதேபோல்  பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்கள் சுகாதாரத்துறை அறிவித்துள்ள படிவங்களை  சமர்ப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது .  அப்படியும்  வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார் அதேபோல் வியட்நாம் குடிமக்கள் உலகில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டது. வெளிநாடுகளில் இருந்து வீட்டுக்கு திரும்பும்வோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.   வியட்நாம் மற்றும் தென்கொரியா இடையே இதுவரை 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேம்பூ ஏர்வேஸ் ,  வியட்ஜெட்  ஏர்வேஸ் மற்றும் ஜெட்ஸ்டர் பசிபிக் உள்ளிட்ட 4  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் .  சுமார் 60 சதவீத விமான போக்குவரத்து சேவைகளை நிறுத்தி  நடவடிக்கை எடுத்தத்தின் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொண்டதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.   
 

click me!