டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 பணக்காரர்களும் உயிரிழப்பு.. நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதா.? என்னாச்சு?

By Raghupati R  |  First Published Jun 23, 2023, 10:46 AM IST

காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் டைட்டானிக் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருந்து வெடித்து சிதறியதாகவும், இதன் விளைவாக கப்பலில் இருந்த ஐந்து பேரும் இருந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியது. கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அழைத்துச் சென்று வருகிறது. 

டைட்டானிக் கப்பலில் ஐந்து பேருடன் புறப்பட்டு சென்றது. அமெரிக்கா, கனடா, பிராண்ச் நாட்டைச் சேர்ந்த உள்ள மீட்புக் குழுவினர் இணைந்து, டைட்டானிக் கப்பலின் சிதைவுக்கு அருகில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது.

Tap to resize

Latest Videos

எழுந்து நின்று கை தட்டிய அமெரிக்க எம்பிக்கள்.. ஆட்டோகிராஃப் டூ செல்ஃபி வரை..கெத்து காட்டிய பிரதமர் மோடி

இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர். ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது.96 மணி நேர கெடு நேற்று காளியுடன் முடிவடைந்தது.

 இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் டைட்டானிக் கப்பலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், அது காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் தானா என வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் ஐந்து உறுப்பினர்களும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று OceanGate Inc. நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

OceanGate இன் CEO ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத் பாகிஸ்தான் தொழிலதிபர்கள், ஹமிஷ் ஹார்டிங் பிரிட்டிஷ் கோடீஸ்வரர் மற்றும் 77 வயதான பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் கப்பலில் இருந்தனர் என்று OceanGate Inc அறிக்கை தெரிவித்துள்ளது.

Tesla : இந்தியாவிற்கு வரும் டெஸ்லா.. பிரதமர் மோடி - டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் சந்திப்பில் நடந்தது என்ன.?

click me!