H5N1 பறவைக் காய்ச்சல் உலகளாவிய தொற்றுநோயைத் தூண்டும் ஆபத்துக்கு நெருக்கமாக இருப்பதாகக் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோயின் வளர்ச்சிப் போக்கை தீவிரமாக கண்காணிப்பதாகவும் கூறியுள்ளனர்
கோவிட்-19 நெருக்கடியை விட அதிக அளவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
H5N1 பறவைக் காய்ச்சல் உலகளாவிய தொற்றுநோயைத் தூண்டும் ஆபத்துக்கு நெருக்கமாக இருப்பதாகக் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோயின் வளர்ச்சிப் போக்கை தீவிரமாக கண்காணிப்பதாகவும் கூறியுள்ளனர்.
பசுக்கள், பூனைகள் மற்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு பாலூட்டிகளில் பல H5N1 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நோயின் தீவிரத்தை கவனிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணை தொழிலாளிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி வந்துள்ளது.
பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு ரகசியப் பெருங்கடல்! அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
இதேபோல ஆறு மாகாணங்களில் உள்ள 12 பசுக்களில் இந்த வைரஸ் தொற்றுநோய் இருப்பது பதிவாகியுள்ளது. மேலும் டெக்சாஸில் மூன்று பூனைகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என்று டெய்லி மெயில் அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரபல பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி, H5N1 வைரஸ் பெருந்தொற்றை உலகம் நெருங்கிவிட்டது என எச்சரித்துள்ளார். "மனிதர்கள் உட்பட பலவகையான பாலூட்டிகளைப் பாதிக்கும் திறன் இந்த வைரஸுக்கு இருக்கிறது. இது ஒரு பயங்கரமான தொற்றுநோய் அச்சுறுத்தலாக உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் H5N1 இறப்பு விகிதத்தை 52 சதவிகிதம் என்று மதிப்பிட்டுள்ளது. இதற்கு மாறாக, கோவிட்-19 இன் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைவாக உள்ளது. இது 2020 முதல் H5N1 புதிய திரிபு வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் இறந்துவிட்டனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஜெர்மனியில் தயாராகும் டெஸ்லா கார்கள்! அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனை ஆரம்பம்!