எஞ்சின் கோளாறால் ரஷ்யாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

By SG Balan  |  First Published Jun 7, 2023, 9:36 AM IST

ஏர் இந்தியா விமானம் 232 பேருடன் அதிகாலை 4 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, எஞ்சின் கோளாறால் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது.


டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியாவின் இடைநில்லா விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவின் மகதானில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து 232 பேருடன் விமானம் ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் புறப்பட்டது.

செல்லும் வழியில் எதிர்பாராத எஞ்சின் கோளாறால் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களை அழைத்துச் செல்ல மாற்று விமானம் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

Latest Videos

undefined

சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!

"ஏர் இந்தியா ஜூன் 7 ஆம் தேதி மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு மாற்று விமானத்தை இயக்கும். தற்போது மகதானில் உள்ள உள்ளூர் ஹோட்டல்களில் தங்கியுள்ள அனைத்து பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிச் செல்லும். பயணிகள் பாதுகாப்பாக சீக்கிரம் சான் பிரான்சிஸ்கோ சென்றடைவதை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சிக்கு அதிகாரிகள் அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து வருகின்றனர்” என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு எதிராக மைக் பென்ஸ்... யார் இவர்?

"அமெரிக்கா நோக்கி பயணித்த விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை அறிந்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை" அமெரிக்க்க செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

"அது அமெரிக்காவிற்குப் புறப்பட்ட விமானம். எனவே, அதில் அமெரிக்கக் குடிமக்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு மாற்று விமானத்தை அனுப்புவதாக ஏர் இந்தியாவிடமிருந்து அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி மேலும் தகவல்களை விமான நிறுவனம் தான் கூறவேண்டும்" எனவும் படேல் தெரிவித்தார்.

இந்தியாவின் இணையப் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டும்! அறிக்கையில் தகவல்

click me!