பல்வேறு படிப்புகளை மேற்கொள்ள பல இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் நிலையில், புதிய மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் இந்து வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு 2,70,000 பேருக்கு மட்டுமே ஆஸி.யில் படிக்க மாணவர் சேர்க்கை அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
பல்வேறு படிப்புகளை மேற்கொள்ள பல இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் நிலையில், இந்த மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் கல்வித்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எச்சரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் சமீபத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, கோவிட்-19 தொற்றுக்கு முன்பைவிட இப்போது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை 10% அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார். தனியார் தொழில் மற்றும் பயிற்சி வழங்கும் நிறுவனங்களில் 50% க்கு மேல் கூடியிருப்பதாகவும் கூறினார்.
சர்வதேச மாணவர் சேர்க்கையை சிறந்ததாகவும், நியாயமானதாகவும் மாற்றும் வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன என்றும், இது முன்னோக்கிச் செல்லக்கூடிய நிலையான பாத்தையை அமைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசம்! விஞ்ஞானிகளை அசர வைத்த கண்டுபிடிப்பு!!
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸி.யில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 60% உயர்ந்து 548,800 வரை சென்றது. இது ஜூன் 2023 வரை இருந்த 518,000 என்ற எண்ணிக்கையை விட கணிசமான அளவுக்கு அதிகமாகும். இது 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வணிக ஆட்சேர்ப்புக்கு உதவும் வகையில் வருடாந்திர மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தியதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கோவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்ததால், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த மார்ச் 2024 இல் தான் ஆஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்கியது. குடியேற்றம் அதிகரிக்கும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய அரசு மாணவர்கள் விசா பெற ஆங்கில மொழி பேசும் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. வெளிநாட்டு மாணவர்களைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் பல மாணவர்களின் கனவுக்கு முட்டிக்கட்டையாகப் பார்க்கப் படுகிறது.
கனடா அரசும் அண்மையில், அந்நாட்டின் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்களுக்கான இடத்தை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு 35% ஆக இருந்தது. புதிய வரம்பின் காரணமாக, 2024ஆம் ஆண்டில், ஏறத்தாழ 3,60,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே கனடாவில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முரட்டு என்ஜினுடன் மிரட்டும் ஹெவி பைக்ஸ்! யமஹா R15 க்கு டஃப் கொடுக்கும் கில்லி!