6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திக்க உள்ளனர்... வெளியானது பரபரப்பு தகவல்

By Ezhilarasan Babu  |  First Published Jul 23, 2022, 1:28 PM IST

ஆறு ஆண்டுகள் கழித்து இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேச கூடுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


ஆறு ஆண்டுகள் கழித்து இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேச கூடுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சந்திப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் அண்டை நாடுகளாக இருந்தாலும் தொடர்ந்து பகை பாராட்டி வருகின்றன, அடிக்கடி இந்திய எல்லை கோட்டிற்குள் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தியாவில் ஊடுருவி  நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்காக சதி வேலையில்  பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத இயக்கங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால் அந்நாட்டுடன் இந்தியா அரசியல் ரீதியான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்நிலையில்  இந்தியா பாகிஸ்தான் பிரதமரை நேரில் சந்தித்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

விவரம் பின்வருமாறு:- ரஷ்யா, சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட  8 நாடுகளின்  அதிபர்களால் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிராந்திய அமைதி வளர்ச்சி, வருமை ஒழிப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிப்பது இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஷாங்காய்  ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டம் ஒவ்வொரு நாட்டிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதற்கான மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது.

கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக தலைவர்கள் கலந்து கொண்டனர், பிரதமர் மோடியும் ஆன்லைன் மூலமாகவே இந்த மாநாட்டில் உரையாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு  செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ளது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில்  நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர்  ஷாபாஸ்  அவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ஜாங் மிங்  நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.

அம்மாநாட்டின் போது இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சந்திக்கும் பட்சத்தில் ஆறு ஆண்டுகள் கழித்து நடைபெறும் சந்திப்பு இதுவாக இருக்கும், மாநாட்டின் போது இரண்டு நாட்டின் இருநாட்டு பிரதமர்களும் ஒரே அரங்கில் தங்க உள்ளனர். ஆனால் இரு தரப்பினரும் சந்திப்பது தொடர்பாக இதுவரை எந்த  விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்தியா அத்தகைய சந்திப்புக்கு அனுமதிக்கும் பட்சத்தில் நிச்சயம் பாகிஸ்தான் தரப்பும் சந்திப்புக்கு முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!