ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் தொழுகையின் போது குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தாலிபான்கள் வசம் வந்தது.
மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க
இந்நிலையில் வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள குசர்கா மசூதியில் இன்று நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் மசூதியை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் 18 பொதுமக்கள் மற்றும் தலிபான்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஷியா - சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இதுகுறித்து ஹெராத் மாகாணத்தின் ஆளுநர் ஹமிதுல்லா கூறும்போது, ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரில் இன்று மசூதியில் எதிர்பாராத விதமாக குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் தலிபான் ஆதரவு மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !