ஹிட்லருக்கு காதலி கொடுத்த பென்சில்! சொற்ப தொகைக்கு விலைபோனதால் ஏமாற்றம்!

By SG Balan  |  First Published Jun 7, 2023, 4:06 PM IST

ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருக்கு அவரது காதலி பரிசளித்த பென்சில் ஏலத்தில் எதிர்பார்த்ததைவிட சொற்பமான விலைக்கு வாங்கப்பட்டது.


ஜெர்மானி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லருக்கு சொந்தமான ஒரு வெள்ளி முலாம் பூசப்பட்ட பென்சில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஏலத்திற்கு வந்தது. அதனை ஏலமிட ஆட்சேபனை இருந்தபோதிலும், முடிவில் கணிக்கப்பட்ட தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகைக்கு விலைபோனது.

அந்த பென்சில் ஹிட்லரின் 52வது பிறந்தநாளில் ஏப்ரல் 20, 1941 அன்று அவரது காதலி ஈவா பிரவுன் அவருக்குப் பரிசளித்ததாக ப்ளூம்ஃபீல்ட் ஏல நிறுவனம் சொல்கிறது. அந்தப் பென்சிலில் AH என்ற அடோல்ஃப் ஹிட்லர் பெயரின் முதல் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

Latest Videos

undefined

செவ்வாயன்று ஏலமிடப்படும் ஹிட்லரின் பென்சில் 5,400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. ஏலத்துக்கு முன் இது 50,000 பவுண்டுகள் முதல் 80,000 பவுண்டுகள் வரை விலைபோகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு தொகைக்குத்தான் அது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

மழைக்காலத்தில் விவசாய நிலத்தில் வைர வேட்டை! அனந்தப்பூர், கர்னூலில் அதிசய நிகழ்வு

அந்தப் பென்சில் பென்சில் முதலில் 2002 இல் ஒரு அரும்பொருள் சேகரிப்பாளரால் வாங்கப்பட்டது. இத்துடன் நாஜி ஜெர்மனி தொடர்புடைய பிற பொருட்களும் ஏலத்திற்கு வந்தன. ஹிட்லரின் கையொப்பமிடப்பட்ட புகைப்படம், நாஜிகளுடன் தொடர்புடைய பல பொருட்கள், நாஜிகளின் ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவையும் ஏலமிடப்பட்டன.

ப்ளூம்ஃபீல்டில் நடந்த ஏலத்தை ஐரோப்பிய யூத கூட்டமைப்பின் தலைவரான ரப்பி மெனாசெம் மார்கோலின் கண்டித்துள்ளார். இந்த ஏலம் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டு அழிந்த லட்சக்கணக்கான மக்களுக்கும், எஞ்சியிருக்கும் யூதர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் அவர் சாடியுள்ளார்.

ப்ளூம்ஃபீல்ட் ஏல நிறுவனம் நாஜி ஜெர்மனி கால பொருட்கள் வரலாற்றின் ஒரு பகுதி என்றும், அவற்றை சேகரிப்பவர்கள் சட்டபூர்வமான சேகரிப்பாளர்கள் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா!

click me!