அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா!

By SG Balan  |  First Published Jun 7, 2023, 1:31 PM IST

14 வயது இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா, psammophile (சாமஃபைல்) என்ற ஆங்கில வார்த்தையை சரியாக உச்சரித்து மதிப்புமிக்க தேசிய ஸ்பெல்லிங் பீ விருதை வென்றுள்ளார்.


அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவர் தேவ் ஷா, psammophile (சாமஃபைல்) என்ற ஆங்கில வார்த்தையை சரியாக உச்சரித்து 2023ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தேசிய ஸ்பெல்லிங் பீ விருதை வென்றுள்ளார்.

வியாழக்கிழமை 95வது தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில் (2023 Scripps National Spelling Bee) சாம்பியன் பட்டம் வென்ற தேவ் ஷா 50,000 டாலர் பரிசையும் வென்றுள்ளார். வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதை பரிசோதிக்கும் இந்த வருடாந்திர போட்டியில் கலந்துகொள்ள இந்திய வம்சாவளி மாணவர் தேவ் ஷா புளோரிடாவைச் சேர்ந்தவர்.

Latest Videos

undefined

மேரிலாந்தின் தேசிய துறைமுகத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அவர், "இதை நம்பவே முடியவில்லை. இன்னும் என் கால்கள் நடுங்குகின்றன" என்று கூறினார். அவர் கடைசியாக உச்சரிப்பதற்கு அளிக்கப்பட்ட சொல்லான psammophile (சாமஃபைல்) என்பது மணற்பாங்கான பகுதிகளில் செழித்து வளரும் தாவரத்தைக் குறிப்பதாகும்.

“P-S-A-M-M-O-P-H-I-L-E”

Watch the moment Dev Shah, an eighth grader from Florida, won the Scripps National Spelling Bee — and $50,000 — by correctly spelling “psammophile.”https://t.co/P3qoJ5I37n pic.twitter.com/Yujouoh9Mn

— The New York Times (@nytimes)

தேவ் ஷா தனக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தையின் வேர்களை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் பாதுகாப்புக்காக அந்தச் சொல்லப்பற்றி அனைத்து தகவல்களையும் கேட்டுக்கொண்டார். அந்தத் தகவல்களைக் கொண்டு தான் சரியாகக் கண்டுபிடித்துவிட்டதை உறுதி செய்துகொண்ட அவர், “P-S-A-M-M-O-P-H-I-L-E” என்று அதன் எழுத்துகளை சரியாக உச்சரித்தார்.

இது இந்தப் போட்டியில் தேவ் ஷாவின் மூன்றாவது முயற்சி ஆகும். இதற்கு முன் 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் முயற்சி செய்திருக்கிறார். தேவ் ஷா வெற்றி பெற்றவுடன் அவரது பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஏறி வாழ்த்தனர். தேவ் ஷா நான்கு ஆண்டுகளாக இதற்காகத் தயாராகி வருவதாக அவரது தாயார் கூறினார்.

உலகம் முழுவதும் 11 மில்லியன் மக்கள் எழுத்துப் போட்டியில் கலந்து கொண்ட பிறகு 11 மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்தனர். ஆரம்ப சுற்றுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி சார்லட் வால்ஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பெரியவர்களையே தடுமாறச் செய்யும் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் இந்த ஸ்பெல்லிங் பீ போட்டி கடந்த சில ஆண்டுகளாக புகழ்பெற்றிருந்தாலும், 1925ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, 2020 இல் போட்டி ரத்து செய்யப்பட்டது, 2021இல் மீண்டும் நடைபெற்றபோது, சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

click me!