தங்களது ஆபாச படத்தை பார்த்த சிறுவனின் வீட்டுக்கே சென்று அவனது தயாரிடம் ஆபாசப்பட நடிகை- நடிகர் புகார்ச்செய்யும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்களது ஆபாச படத்தை பார்த்த சிறுவனின் வீட்டுக்கே சென்று அவனது தயாரிடம் ஆபாசப்பட நடிகை- நடிகர் புகார்ச்செய்யும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆபாசப் படங்களில் காட்டப்படும் உறவு முறையைப் பார்க்கும் சிலர், நிஜ வாழ்க்கையிலும் அதே போன்று இருக்க வேண்டும் என எண்ணி தங்களது துணையிடம் அதை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது நடக்காமல் போகும் பட்சத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு, அது விவகாரத்தில் கூட முடிந்த பல சம்பவங்கள் உண்டு. அது வெளிநாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் அது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் ஆபாசப் படங்களில் காட்டப்படும் உறவு முறைக்கும், உண்மை வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை விளக்கும் விதமாக நியூசிலாந்து நாட்டு அரசு, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவானது இரண்டு ஆபாசப் பட (Porn) நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு ஆபாசப் பட நடிகர்கள் நிர்வாணமாக ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகின்றனர். வீட்டில் இருக்கும் தாய், கதவைத் திறக்கிறார். அப்போது தாங்கள் யார் என்பதை அறிமுகம் செய்து கொள்ளும் நடிகர்கள், வீட்டில் இருக்கும் சிறுவன் தங்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.
இதைக் கேட்டு அந்த தாய் அதிர்ந்து போன நிலையில், கையில் லேப்டாப் உடன் அந்த சிறுவன் வெளியில் வருகிறான். அவனும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிறுவன் தங்களின் படங்களைப் பார்த்து உறவு முறை குறித்து தவறான புரிதலைக் கொண்டுள்ளான் என்றும் விவரிக்கின்றனர். இவ்வாறு கலகலப்பாக முடியும் அந்த வீடியோ சொல்ல வந்த செய்தியை வித்தியாசமாகவும், மனதில் நிற்கும் விதத்திலும் சொல்லிவிட்டுச் செல்கிறது. இதுவரை 20 லட்சம் பார்வைகளைக் கடந்து இந்த வீடியோ பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு வீடியோ குறித்துப் பேசிய, நியூசிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர், ''பல இளம் தலைமுறையினர் செக்ஸ் பற்றி ஆபாசப் படங்கள் மூலமே தெரிந்து கொள்கிறார்கள். படத்தில் பார்ப்பதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர்த்தவே இந்த விழிப்புணர்வு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.