சிங்கப்பூரில் முதல்முறையாக சிவப்பு கண்கள் மற்றும் சாம்ல் வெள்ளி கலந்த உரோமங்களை கொண்ட சில்வர் லாங்கூர் (Silvered Langur) வகைக் குரங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகை குரங்கு பெரும்பாலும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் என சிங்கப்பூர் தேசிய பூங்காக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சில்வர் லாங்கூர் வகை குரங்கை, கிளமெண்டி உட்ஸ் பூங்காவில் ((Clementi Woods Park)) கண்டதாக, அதனை புகைபடமெடுத்து அவரது இஸ்டாவில் பதிவிட்ட நபர் தெரிவித்துள்ளார். பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்த அந்த நபர் 'என்னவோ உறுமும் சத்தம் கேட்டதாகவும், முதலில் காட்டுப்பன்றி என்று நினைத்த போது, அதை மரத்தில் இருந்தது கண்டவுடன் குரங்கு என தெரிவித்தார்.
இவ்வவகை சில்வர் லங்கூர் (Silvered Langur) குரங்குகள் புருணை, இந்தோனேசியா, மலேசியா ஆகியநாடுகளில் மட்டுமே பொதுவாகக் காணப்படும். இவை, சிங்கப்பூரில் இருந்ததில்லை என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
பேய் ஓட்ட இதெல்லாம் செய்யணும்.. தோழியை ஏமாற்றி கற்பழித்த நபர் - சிங்கப்பூர் அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
மேலும், சில்வர் லாங்கூர் (Silvered Langur) வகை குரங்குகள் 46 செண்டிமீட்டர் முதல் 56 செண்டிமீட்டர் உயரம் வரை வளரும் என்றும், குரங்கின் வால் உடலை விட மிக நீளமாக வளரும் என தெரிவித்துள்ளது. இந்த குரங்குகள் பொதுவாக மனிதர்களை நெருங்காது என்றும், பொதுமக்களும் குரங்கை நெருங்கவேண்டாம் என சிங்கப்பூர் தேசிய பூங்காக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைக்குக் புதிதாக வந்துள்ள இந்த சில்வர் லாங்கூர் குரங்குகை கண்காணிக்கவுள்ளதாகவும் தேசிய பூங்காக்க் கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பழைய விரைவு ரயில் ஒன்றில் திடீரென கிளம்பிய வெண்புகை! பயணிகள் வெளியேற்றம்