9 பிரிவினைவாத அமைப்புகள்... இஷ்டம் போல உலவும் பயங்கரவாதிகள்... இந்தியாவின் கோரிக்கையை கண்டுகொள்ளாத கனடா!

By SG Balan  |  First Published Sep 20, 2023, 10:24 AM IST

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஐ.எஸ்.ஐ உடன் சதி செய்த குண்டர்கள் பலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தைப் பெற்றுள்ளனர் என அதிகாரிகள் சொல்கின்றனர்.


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்திப் பேசியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே இருதரப்பு உறவுவில் உரசல்கள் அதிகரித்து வருகின்றன.

கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்தியாவின் தூதரக அதிகாரி ஒருவரையும் வெளியேற்றியது. ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை நிராகரித்து இந்திய வெளியுறவுத்துறை, பதிலடியாக கனடாவின் தூதரக அதிகாரி ஒருவரையும் இந்தியாவில் இருந்து 5 நாட்களுக்குள் வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

இந்த விவகாரம் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தியாவைக் குற்றம்சாட்டுவது தனது நோக்கம் அல்ல என்றும் இந்தியா இந்த விஷயத்தை இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம் என்றுதான் கூறியதாவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நெருப்புடன் விளையாடுகிறார்கள்! மேற்கத்திய நாடுகளில் குர்ஆன் எரிப்பு குறித்து இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

இச்சூழலில் கனடா பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் ஒன்பது பிரிவினைவாத அமைப்புக்கள் கனடாவில் தங்கள் தளங்களைக் கொண்டுள்ளன என்றும் பல கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை உள்ளிட்ட குற்றங்களிலும் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற அனுமானங்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல தூதரக மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளை நாடு கடத்துவது குறித்த பிரச்சினையை இந்திய அதிகாரிகள் எழுப்பியுள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பல ஆவணங்கள் கனடாவிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறைந்தது எட்டு நபர்கள் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் சதி செய்த பல குண்டர்கள் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தைப் பெற்றுள்ளனர் என அதிகாரிகள் சொல்கின்றனர்.

1990களின் முற்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குர்வந்த் சிங் உள்ளிட்ட பயங்கரவாதிகளை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கனடா அதிகாரிகளிடம் நிலுவையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குர்வந்த் சிங் மீது இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸும் நிலுவையில் உள்ளது.

வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்! கனடா காலிஸ்தான் குழு பொறுப்பேற்பு!

குர்பிரீத் சிங் உட்பட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் கனடா முகவரியை அளித்து, அவர்களை நாடு கடத்துமாறு இந்திய அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல், 16 கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் அர்ஷ்தீப் சிங் என்ற அர்ஷ் டல்லா, பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு பொறுப்பேற்ற சதீந்தர்ஜித் சிங் பிரார் என்ற கோல்டி ப்ரார் போன்றவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகள் கணிசமான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், கனடா அரசாங்கம் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரிவினைவாத அமைப்புகள் வெளிப்படையாக கொலை மிரட்டல்களை விடுத்து, பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, இந்தியாவில் நாசவேலைகளை திட்டமிட்டு வருகின்றன. பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவை கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் சார்பு கும்பல் படுகொலை செய்தது இதற்கு ஒரு தெளிவான உதாரணம் என்று இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காலிஸ்தானின் தஷ்மேஷ் படைப்பிரிவைச் சேர்ந்த குர்வந்த் சிங் பாத், பகத் சிங் பிரார் (பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட்டின் மகன்), மொனிந்தர் சிங் புவால் மற்றும் சதீந்தர் பால் சிங் கில் ஆகியோர் கனடாவில் இயங்கிவரும் இந்தியாவால், இந்தியாவால் தேடப்படும் பிற பயங்கரவாதிகள்.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை பிரிவினைவாதக் குழுக்களிடையே இருக்கும் உள் போட்டிகளின் விளைவாகும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

click me!