ரஷியாவில் குளிரில் உறைந்து கைக்குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யா நாட்டில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. பகல்,இரவு என அனைத்து வேளைகளிலும் கடும் பனி கொட்டித்தீர்க்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் குளிரில் உறைந்து 7 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் ரஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷியாவின் ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. நல்ல காற்றை நுகர்ந்து தூங்க வேண்டும் என்பதற்காக வீடு பால்கனி அருகே குழந்தையை பெற்றோர் வைத்துள்ளனர். அப்போது அங்கு கடும் குளிர் நிலவி இருக்கிறது. குழந்தை அயர்ந்து தூங்கி விடவே பெற்றோர் தங்கள் வேலையை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இந்தநிலையில் வெகுநேரமாக குளிரில் குழந்தை இருந்ததால் அதில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து அங்கிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, கடும் குளிரில் ஹைப்போதர்மியாவால் உடலில் வெப்பநிலை குறைந்து விடும். யாரும் தனித்து இருக்க கூடாது. குறைந்தபட்ச வெப்ப நிலையால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனிடையே பலியான குழந்தையின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.