தலை கால் புரியாமல் துள்ளி குதிக்கும் ஈரான்..!! வஞ்சம் வைத்து பழி தீர்க்க காத்திருக்கும் அமெரிக்கா..!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 9, 2020, 3:12 PM IST

அதேநேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற அந்நாட்டின்  மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கூறினார்.


ஈரானை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும்   சர்வதேச நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  கடந்த  வாரம்  அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம்  ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். 

 

Latest Videos

அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக  ஈராக்கில்  உள்ள அலி ஆசாத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமா விமான தளம்மீது ஈராக் 12 அணு ஆயுதம் தாங்கிய  ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது .  இத்தாக்குதல்  அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது ராணுவ தளபதி சுலைமானி  அடக்கம் செய்யபட்ட சில மணி நேரங்களிலேயே ஈரான் இத் தாக்குதலை நடத்தி இருக்கிறது .  இந்த தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது ஆனால் இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம்  பேசிய அதிபர் டிரம்ப்,  ஈரான்  நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு   எந்த பாதிப்பும் இல்லை  என்றார் ,  அமெரிக்க வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் ராணுவ தளத்தில்  மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார் அமெரிக்காவை  மிரட்டுவதை ஈரான் இத்துடன்  நிறுத்திக்கொள்ள வேண்டும்  என எச்சரிக்கை விடுத்தார்.  

அணு ஆயுத கனவை ஈரான் கைவிடவேண்டும் என்றும் இனியும்  ஈரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றார்.   அதேநேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற அந்நாட்டின்  மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கூறினார்.  மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் தங்களுக்குத் தேவையில்லை என்று ட்ரம்ப் ,  அதிக அளவில் கச்சா எண்ணெய் தங்கள் நாட்டிலேயே  தயாரிப்பதாக  தெரிவித்தார் தொடர்ந்து அத்துமீறி வரும் ஈரானை உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தனிமைப்படுத்த வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார் .
 

click me!