ட்ரம்ப் நினைத்தாலும் ஈரான் மீது போர் தொடுக்க முடியாது...!! பகீர் கிளப்பும் அரசியல் பின்னணி..!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 9, 2020, 4:04 PM IST

அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் ஆனால் அதிபர் ட்ரம்ப்  தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என கூறியுள்ளதுடன் ,  நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த பிறகு முடிவு எடுக்காமல் தன்னிச்சையாக  முடிவுகள் எடுக்கிறார் ட்ரம்ப்  என நான்சி குற்றம்சாட்டியுள்ளார்


ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் டொனால்டு  ட்ரம்ப்பின்  ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு சபாநாயகர் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ட்ரம்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ட்ரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வாரம் அமெரிக்க விமானப்படை  ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம்  சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.

Latest Videos

அதிபர் டிரம்ப்பின்  உத்தரவின்பேரில் இந்த தாக்குதல்  நடந்திருப்பது   ஈரானை அதிக ஆத்திரமூட்டியுள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவை நிச்சயம் பழி தீர்ப்போம் என ஈரான் நாட்டின்  உச்ச தலைவர் காமினி மிரட்டல் விடுத்தார் .  அதேசமயம் ஈரானில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகள் வெளியேற வேண்டுமெனவும் எச்சரித்தனர் ஆனால் இதுவரையில் அமெரிக்கப் படைகள் வெளியேறவில்லை,   இதனால் ஈராக்கின் அல் ஆசாத் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை  தாக்குதல் நடத்தியது, இதில்  80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது .  ஆனால் அதை மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் தாக்குதலில் ஒரு அமெரிக்கர் கூட உயிரிழக்கவில்லை  அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் , ஆனால்   ராணுவ தளத்தில்  மட்டும் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது ,  இந்நிலையில்   தன்னிச்சையாக போர் தொடுக்க அதிபர் டிரம்புக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கும் வகையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி  பெலோசி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் ,  அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் ஆனால் அதிபர் ட்ரம்ப்  தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என கூறியுள்ளதுடன் , நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த பிறகு முடிவு எடுக்காமல் தன்னிச்சையாக  முடிவுகள் எடுக்கிறார் ட்ரம்ப்  என நான்சி குற்றம்சாட்டியுள்ளார் .

click me!