பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் டானிமர் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறிடிக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் தஞ்சமடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என கூறப்படுகிறது.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு விவரம் இன்னும் வெளியாகவில்லை.