ஒரே நேரத்தில், 6 யானைகள் நீரில் மூழ்கி பலி...!! குட்டியானையை காப்பாற்றச் சென்று பரிதாபம்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2019, 5:52 PM IST
Highlights

ஹயேவ் நரோக்  என்ற நீர்வீழ்ச்சியில் ஒரு குட்டி யானை பிளிரும் சத்தம் கேட்டது,  பூங்கா ஊழியர்கள் ஆங்கு சென்று பார்த்தபோது நீரில் குட்டி யானை மூழ்கி கிடப்பதையும், அதைக் காப்பாற்ற இரண்டு யானைகள் முயற்சிப்பதையும் பார்த்தனர். உடனே விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த  இரண்டு யானைகளையும் மீட்டு பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர்.

நீரில் மூழ்கிய குட்டி யானையை காப்பாற்ற சொன்ற  6 யானைகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்குப்போராடிய இரண்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

யானைகள் என்றேலே மனிதனைப்போல் புத்திக் கூர்மையுள்ளவைகள், மனிதர்களைப்போன்றே குடும்பமாக வாழக்கூடிய விலங்கினம், யானைகளை பார்த்தே மனிதர்கள் குடும்பமாக வாழக் கற்றுக் கொண்டனர்,  இப்படி மனித சமூகத்துடன் யானைகளுக்கான பந்தம் மிக நெருக்குமானதாகவே இருந்து வந்துள்ளது. காரணம் அவைகள் பாரிய உருவம் கொண்டவைகள் என்பதால் மட்டும் அல்ல அது பாசமிக்க விலங்கு என்பதும் ஒரு காரணம். மற்ற விலங்குகளை காட்டிலும், யானைகள் எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லக்கூடியவைகளாகும், பாசத்திலும் யானைகளை விஞ்சும் ஒரு விலங்கு இல்லை என்று கேள்விப்பட்டிருப்போம்,  அந்த பாசத்திற்கு உதாரணமாக  தாய்லாந்து நாட்டில் துயர சம்பவம் ஒன்று  நடந்துள்ளது.  தாய்லாந்து பாங்காக் அருகே  ஹவோ யாய் தேசிய வனவிலங்கு பூங்காவில்தான் அந்த துயரம்.

அந்த பூங்காவில் ஏராளமான விலங்குகளும், பறைவையினங்களும் வாழ்ந்து வருகின்றன.  அங்கு ஏராளமான யானைகளும் இருந்துவருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பூங்காவாக அது உள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று  அங்குள்ள ஹயேவ் நரோக்  என்ற நீர்வீழ்ச்சியில் ஒரு குட்டி யானை பிளிரும் சத்தம் கேட்டது,  பூங்கா ஊழியர்கள் ஆங்கு சென்று பார்த்தபோது நீரில் குட்டி யானை மூழ்கி கிடப்பதையும், அதைக் காப்பாற்ற இரண்டு யானைகள் முயற்சிப்பதையும் பார்த்தனர். உடனே விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த  இரண்டு யானைகளையும் மீட்டு பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர்.பிறகு  நீர்வீழ்ச்சிக்கு அருகே கொஞ்சம் தள்ளிச் சென்று பார்த்தபோது  6 யானைகள் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தன. குட்டி யானையை காப்பாற்ற முயன்று அந்த யானைகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
 

click me!