அமெரிக்க மற்றும் பிரிட்டன் கப்பல்களுக்கு விரிக்கப்பட்ட வலையில் சீனாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த செய்தியும் கசிந்து வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க மற்றும் பிரிட்டன் கப்பல்களுக்கு என்று சீனாவினால் விரிக்கப்பட்டு இருந்த வலையில் அந்த நாட்டின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 சீன வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மஞ்சள் கடலில் நடந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த செய்தியை தைவானைப் போலவே சீனாவும் மறுத்து வருகிறது.
பிரிட்டன் உளவுத்துறை இந்த நீர்மூழ்கிக் கப்பல் சீனாவுக்கு சொந்தமான, 093-417 என அடையாளம் கண்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 21 அன்று கப்பலில் பயணித்த 55 சீன வீரர்களும் ஆக்சிஜன் இன்றி கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் கேப்டன் மற்றும் 21 அதிகாரிகளும் அடங்குவர் என்று செய்தியையும் தி டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!
ஷாங்காயின் வடக்கே, ஷான்டாங் மாகாணத்திற்கு அருகே சிக்கிய நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்ஸிஜன் தீர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கும் தகவலில், நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்சிஜன் தீர்ந்து இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று புரிந்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தி டைம்ஸ் செய்தியில், ''அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கப்பல்களை சிக்க வைப்பதற்கு என்று பீஜிங்கால் ஏற்படுத்தப்பட்ட சங்கிலி மற்றும் நங்கூரத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் மோதியுள்ளது. இதையடுத்து கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து கப்பலை மீட்பதற்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போராடியுள்ளனர். இந்த நிலையில் கப்பலில் ஆக்சிஜன் இழப்பு ஏற்பட்டு, நச்சுவாயு பரவி கப்பலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தாலும் இதை சீனா மறுத்து வந்துள்ளது. சீனாவிடம் ஆறு விதமான நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல் நவீனமாக வடிவமைக்கப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.