சிரியாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஐஎஸ் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.
சிரியா மீது நடத்தப்பட்ட இருவேறு பயங்கரத் தாக்குதல்களில் அந்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உள்பட குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டுப் போரினால் பல இடர்பாடுகளைச் சந்தித்துவரும் சிரியா கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கப் பாதிப்பினால் மேலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இச்சூழலில் அடுத்தடுத்து இருவேறு மோசமான தாக்குதல்கள் அந்நாட்டின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
அந்நாட்டின் பாலைவனப் பகுதியில் உள்ள ஹோம் மாகாணத்தில் அல்-சொக்னா என்ற பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று (சனிக்கிழமை) பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பொதுமக்கள் 46 பேரும் சிரிய ராணுவ வீரர்கள் 7 பேரும் அடங்குவர்.
Viral video: டும் டும் பாட்டுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய ஜப்பானிய பெண் - வைரல் வீடியோ!
Viral Video: திருமண விழாவில் மழை போல் வாரி இறக்கப்பட்ட 100, 500 ரூபாய் நோட்டுகள்
இத்தாக்குதல் நடந்த 24 மணிநேரத்திற்குள் அந்நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடந்தியுள்ளது. நகரின் மத்தியப் பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடம் ஒன்றின் மீது ராக்கெட் விழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
உள்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.22 மணிக்கு இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலில் பொதுமக்கள் உள்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள் மட்டுமின்றி வேறு பயங்கரவாத அமைப்பினரும் அந்நாட்டில் அதிக அளவில் இயங்கிவருகின்றனர். மற்றொரு பக்கம் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும் உள்ளனர். இவர்களை ஒடுக்க சிரிய அரசும் ராணுவமும் போராடி வருகிறது. இச்சூழலில் சிரியாவில் உள்ள பயங்கரவாதக் குழுக்களைத் தீர்த்துக்கட்டும் நோக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சிரியா மீது மாறிமாறி வான்வெளித் தாக்குதல்களை நடத்திவருகின்றன.