வானில் அதிசயம் சூரியனுக்கு அருகில் இருக்கும் 5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம்

By Dhanalakshmi G  |  First Published Jun 24, 2022, 4:51 PM IST

வானில் ஒரு அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பிரபஞ்சமே அதிசயமானதுதான். அதில், 
மேலும் ஒரு அதிசயம் தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. வானில் ஒரே நேர் கோட்டில் புதன்,
 வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் அணி வகுத்து நிற்கின்றன. 


வானில் ஒரு அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பிரபஞ்சமே அதிசயமானதுதான். அதில், 
மேலும் ஒரு அதிசயம் தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. வானில் ஒரே நேர் கோட்டில் புதன்,
 வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் அணி வகுத்து நிற்கின்றன. 


இந்த நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை வானில் தெரிந்துள்ளது. இது தொடர்ந்து உலகின் பல்வேறு 
இடங்களில் வரும் திங்கள் கிழமை வரும் வரை தெரியும் என்று வானியல் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்வை வெறும் கண்களில் பார்க்க முடியும். பொதுவாக வெறும் கண்களில் 
பூமியின் இரட்டை கோள் என்று அழைக்கப்படும் வெள்ளி கோளை பார்க்க முடியும்.  

இதேமாதிரியான தோற்றம் இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவற 
விட்டால், இதுபோன்ற நிகழ்வைப் பார்க்க 2040ஆம் ஆண்டு வரை காத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

வானில் சூரியனுக்கு மேல் நேர்கோட்டில் இந்த கிரகங்கள் அணி வகுத்து நிற்கும். சுற்று வட்டப் பாதையில் 
ஒவ்வொரு கோளும் மற்றொரு கோளில் இருந்து பல பில்லியன் கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும். 
ஆனால், நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழும். தாராளமாக பார்க்கலாம்.
சூரிய உதயத்திற்கு முன்பு, சூரியன் அஸ்தமனம் ஆனதற்கு பின்னர் இந்த நிகழ்வை பார்க்கலாம்.

வடக்கு அரை கோளத்தில் வசிப்பவர்களாக இருந்தால், சூரிய உதயத்திற்கு 45,  90 நிமிடங்களுக்கு 
முன்பு இந்த நிகழ்வை பார்க்கலாம். சூரிய உதயம் ஆகிவிட்டால், கண்களுக்கு தெளிவற்ற நிலையில் 
கோள்கள் தென்படும். 

சூரியனுக்கு அருகில் வெள்ளி கிரகம் இருக்கும்போது, வியாழன் கோளுடன் இணைந்து 
சனி கோளும் வெளிச்சமாக இருக்கும். அதற்கு அருகில் இருக்கும் செவ்வாய் சிவப்பு 
நிறத்தில் இருக்கும். இந்த நிகழ்வு கடந்த ஜூன் பத்தாம் தேதி முதல் நிகழ்ந்து வருகிறது. 
சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் மெதுவாக நகர்ந்து தன்னை சூரியனின் 
நேர் கோட்டில் இருந்து விடுவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த அறிய வாய்ப்பை பார்க்க 
தவற விடாதீர்கள்.

click me!