காபுலில் மீண்டும் இந்திய தூதரகம்.. பாதுகாப்புக்கு உறுதி அளித்த தலிபான்கள்.. வெளியுறவுத்துறை மாஸ் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2022, 10:26 PM IST
Highlights

ஆப்கனிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள மீண்டும் இந்தியா அந்நாட்டின் தலைநகர் காபுலில் தனது தூதரகத்தை திறந்துள்ளது. இதுதொடர்பான தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆப்கனிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள மீண்டும் இந்தியா அந்நாட்டின் தலைநகர் காபுலில் தனது தூதரகத்தை திறந்துள்ளது. இதுதொடர்பான தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் ஆப்கனிஸ்தான் சென்று தாலிபான்களின் மூத்த அதிகாரிகளை சந்தித்த நிலைகள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆப்கனில் நோட்டோ அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த நிலையில், தலிபான் தீவிரவாத அமைப்பினர் ஆப்கனில் பல்வேறு மாகாணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்நாட்டின் தலைநகர் காபுலை அவர்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பினார். பின்னர் அமெரிக்க கூட்டுப்படை முழுவதுமாக வெளியேறியது, ஆப்கன் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளனர். அடிப்படைவாதிகளான தலிபான்கள் அந்நாட்டு மக்களை மதக் கட்டுப்பாடுகளை கூறி கொடுமை படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

 

எதிர்ப்பு குழுவினரை அடையாளம் கண்டு அவர்களை பழிதீர்க்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்நாட்டுப் பெண்களுக்கு மதரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலிபன்களின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆப்கன் நாட்டுக்குச் சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார். போரினால் மிகக் கடுமையாக அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் மற்றும் அதை  மேற்பார்வையிட சென்றுள்ளதாக அப்போது இந்திய  வெளியுறவு துறை தெரிவித்திருந்தது.

அங்கு மூத்த தாலிபன் அமைப்பினரை சந்தித்து இந்திய அதிகாரிகள் குழு ஆலோசனை  நடத்தியது. இதேபோல இந்தியா சார்பில் அந்நாட்டு மக்களுக்கு ஏதாளமான உணவு, மருந்துப் பொருட்கள், ஆடைகள், போன்ற மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பயணத்தின் போது காபூலில் மூத்த தலைவர் அமைப்பினரை இந்திய வெளியுறவுத்துறை குழுவினர் சந்தித்தனர். அப்போது காபுலில்  மீண்டும் ராஜிய உறவுகளை இந்தியா தொடக்க வேண்டும் என்றும் அதற்காக இந்திய தூதரகத்தை காபுலில் மீண்டும் திறக்கவேண்டும் என்றும், இந்திய தூதரகத்திற்கு முழு பாதுகாப்பை அளிக்கப்படும் என்று தலிபான்கள்உறுதி அளித்தனர்.

எனவே மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா மீண்டும் அங்கு தூதரக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆப்கனிஸ்தான் மக்களுடன் இந்தியா வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான உறவை கொண்டுள்ளது. அங்கு மனிதாபிமான உதவிகளை திறம்பட வழங்குவதற்கான பல்வேறு பங்குதாரர்களின் முயற்சியை உன்னிப்பாக கண்காணித்து ஒருங்கிணைத்து வருகிறது. ஆப்கனிஸ்தான் மக்களுடனான  உறவை தொடர்வதற்காக இந்திய தொழில்நுட்பக் குழு ஒன்று இன்று காலை  காபுலுக்கு சென்றுள்ளது. அங்கு நமது  தூதரகம் மீண்டும்  திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு நமது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிட மற்றொரு இந்திய குழு சென்று தாலிபனின் மூத்த உறுப்பினர்களை சந்தித்தது. அந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராயப்பட்டது. ஆப்கனிஸ்தான் மக்களுடனான நமது உறவு நீண்ட நெடியது ஆப்கானிஸ்தான் மக்களுக்கான மனிதாபிமான உதவி உட்பட மேம்பாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றில் எங்கள் தொடர்ந்து முன்னோக்கி செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

click me!