ஈரான் கொடுத்த மரண அடி, மூளை கலங்கிய அமெரிக்க ராணுவம்...!! அய்யோ... அம்மா அப்பா என அலறும் ட்ரம்ப்...!!

Published : Jan 25, 2020, 11:40 AM IST
ஈரான் கொடுத்த மரண அடி,  மூளை கலங்கிய அமெரிக்க ராணுவம்...!!  அய்யோ... அம்மா அப்பா என அலறும் ட்ரம்ப்...!!

சுருக்கம்

அதில் 34 வீரர்களுக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக பென்டகன்  அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் ஏவுகணைத் தாக்குதலில் 34 அமெரிக்கர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது .  கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி படை தளபதி காசிம் சுல்தானி படுகொலை செய்யப்பட்டார் .  அதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள்  மற்றும் ராணுவ துருப்புகளின் மீது ஈரான் புரட்சிப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,  கடந்த முறை அமெரிக்க  விமானத் தளத்தின் மீது   ஏவுகணை தாக்குதல் நடத்திய  ஈரான் ,  அதில் 100 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்தது ,  ஈரான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை  என்று மறுத்த அதிபர் ட்ரம்ப் அமெரிக்க விமானத்தளம் மட்டும் அதில் லேசாக பாதித்துள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் ஈரானின் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது . அதில் 34 வீரர்களுக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக பென்டகன்  அறிவித்துள்ளது. 

ஈரானின் ஏவுகணை தாக்குதலால்  சில வீரர்களுக்கு மூளை அதிர்சி ஏற்பட்டுள்ளதுடன் , 34 பேர் கடுமையான  தலைவலியால் அவதிப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ஆரம்பத்தில் இல்லை என்று மறுத்த ட்ரம்ப் தற்போது அமெரிக்க ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ,  ட்ரம்ப் வீம்புக்காரர் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!