வாகனங்கள் மீது பயங்கரமாக மோதிய எரிபொருள் லாரி..! 30 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!

By Manikandan S R S  |  First Published Mar 8, 2020, 12:44 PM IST

சிரியாவில் எரிபொருள் டிரக் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 30 பேர் பலியாகினர். 


சிரியாவின் டமாஸ்கஸ்-ஹோம்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் டிரக் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே சாலையில் பயணிகள் பேருந்து இரண்டும் பிற வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் தாறுமாறாக சென்று சாலையில் வந்த பயணிகள் பேருந்து மற்றும் வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

Latest Videos

எரிபொருள் டிரக் மோதியதில் வாகனங்கள் பலத்த சேதமடைந்து அதில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்து அலறினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு படையினரின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 30 பேர் உடல் நசுங்கி பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!

click me!