ஆப்கனிஸ்தான் விவகாரத்தில் இந்தியா வரக்கூடாது...!! விஷத்தை கக்கும் பாகிஸ்தான்...!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 7, 2020, 2:39 PM IST

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவிற்கு என்ற பொறுப்பையும் வழங்கக்கூடாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது .  சமீபத்தில் தாலிபன் தீவிரவாத இயக்கத்துடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது .


ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவிற்கு என்ற பொறுப்பையும் வழங்கக்கூடாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது .  சமீபத்தில் தாலிபன் தீவிரவாத இயக்கத்துடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது .  இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி பேசியதாவது . ஆப்கானிஸ்தான் அமைதி விவகாரத்தில் இந்தியா எந்த வகையிலும் பங்களிப்பு வழங்குவதையும் பாகிஸ்தான் விரும்பவில்லை . 

Latest Videos

அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதையும் விரும்பவில்லை ,  இந்தியா எப்போதும் நாசம் செய்யும் வேலையை தான் செய்யும் .  கடந்த காலங்களிலும் சரி ,  இப்போதும் சரி ஆப்கானிஸ்தானில் உள்ளும் வெளியேயும் நாசம் செய்யும் பணியை தான் இந்தியா செய்து வருகிறது . ஆப்கானிஸ்தானில் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் முயற்சி .  பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் இருதரப்பு உறவு மூலமாக தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகின்றனது. 

அமெரிக்கா,  தாலிபன் அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒருபோதும் பங்கேற்கவில்லை .  ஆனால் அமைதிக்கான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது ஆப்கனிஸ்தானில் அமைதி நிலவ உத்தரவாதம் கொடுக்கவோ பொறுப்பேற்றகவோ பாகிஸ்தானால் முடியாது என அவர் கூறியுள்ளார் .   சமீபத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் , பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது . அந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .
 

click me!